பெங்களூர் மல்லேஸ்வரம் பாஜக அலுவலகம் அருகே, கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட சிம் கார்டு ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவருக்கு உரியது என கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் தொடர்பை மறைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் செல்போன் சிம்கார்டு ரிமோட் கன்ட்ரோலாக பயன்படுத்ததப்பட்டதாக போலீஸார் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த பிரமுகர் கேரள கர்நாடக எல்லையில் உள்ள ஊரில் வசிப்பவர் என்று தெரிவித்துள்ள காவல்துறை அதிகாரி ஒருவர், அவரை பற்றிய கூடுதல் தகவல்களை வெளியிடவில்லை. இந்த தகவல் வெளிவரும் போதே கோவையை சேர்ந்த மேலும் ஒருவரை கேரளாவில் காவல்துறையினர் கைது செய்கின்றனர். மேலும் கிச்சான் புகாரியிடமிருந்து 17 சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டதாகவும், குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட சிம்கார்டுக்கு உரிமையாளரான அந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் போன் குண்டுவெடிப்புக்கு முதல் நாள் காணாமல் போனதாகவும் ஒரு தகவலை தெரிவித்து, அதனை திருடி கைது செய்யப்பட்டவர்கள் குண்டுவெடிப்பை நடத்தியுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக மாலேகான் குண்டுவெடிப்பு, ஹைதராபாத் குண்டுவெடிப்பு, அஜ்மீர் குண்டுவெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு என பல்வேறு வழக்குகளிலும் முதலில் அப்பாவி இளைஞர்களை கைது செய்து சித்திரவதை செய்து, பின்னர் நிரபராதிகள் என விடுதலை செய்தனர். இதுபோன்ற தாக்குதல்தான் தற்போது பெங்களுர் பா.ஜ.க அலுவல குண்டுவெடிப்பு தாக்குதலிலும் இணைந்துள்ளது. இந்த சிம்கார்டு ஆதாரம் மூலம், தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டுவெடிப்பில் வெளிப்பட்ட சதிதிட்டத்தினைப் போன்று தற்போது பெங்களூர் குண்டுவெடிப்பின் சதியும் வெளிப்பட்டுள்ளது.
கர்நாடக தேர்தல் நெருங்கிய நேரத்தில் ஊழல், மோசமான நிர்வாகம் மற்றும் சிறுபான்மை விரோதப்போக்கு ஆகியவற்றால் மக்கள் செல்வாக்கை இழந்திருந்த பா.ஜ.க இழந்த செல்வாக்கை காப்பற்றும் விதமாக அக்கட்சியின் அலுவலகத்தில் திடீரென குண்டுவெடித்தது.
இதனை அரசியல் ஆதாயத்திற்காக பாஜக நடத்திய வெடிக்குண்டு என அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஒருவரும் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் புதிய திருப்பமாக குண்டுவெடிப்பிற்கு பயன்பட்டு இருப்பது ஆர்எஸ்.எஸ் பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான சிம் கார்டு என தெரியவந்துள்ள நிலையில் அதுகுறித்தும் தீவிர விசாரணை நடத்தவேண்டும் எனவும் காவல்துறையினரை நடுநிலையாளர்கள் கேட்டுள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment