Sunday, May 12, 2013

கோவா குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் தமிழகத்தில்: என்.ஐ.ஏ தேடுதல் வேட்டை!

கோவா குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் தமிழகத்தில்:என்.ஐ.ஏ தேடுதல் வேட்டை!

கோவா: கோவா மட்காவ் வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் தேடப்பட்டு வரும் சங் பரிவார் பயங்கரவாதிகள் தென்னிந்தியாவில் பதுங்கி இருக்கிறார்கள் என்ற தகவலை அடுத்து தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்களில் என்.ஐ.ஏ தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது.

2009 அக்டோபர் மாதம் 16ம் தேதி தீபாவளி பண்டிகையின் முன் தினம் கோவாவிலுள்ள மட்காவில் வெடிகுண்டு வெடித்தது. வெடிகுண்டுகளை வெடிக்க வைக்க மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்ற போது எதிர்பாராதவிதமாக குண்டுகள் வெடித்ததில் சங் பரிவார் பயங்கரவாதிகள் இருவர் உயிரிழந்தனர். மற்றொரு வெடிகுண்டைக் காவல் துறையினர் செயல் இழக்க செய்தனர்.

இதன் பின்னணியில் சங் பரிவார் அமைப்புகளில் ஒன்றான சனாதன் சம்ஸ்தா என்ற பயங்கரவாத அமைப்பினரே சதி செயலில் ஈடுபட்டார்கள் என்ற விவரம் விசாரணையில் தெரிய வந்தது. இச்சதியில் மொத்தம் 12 சங் பரிவார் பயங்கரவாதிகள் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் ஆறு பயங்கரவாதிகளைக் காவல் துறை அதிகாரிகள் கைது செய்தனர். இருவர் வெடிகுண்டு வெடித்து உயிரிழந்தனர்;. நான்கு பயங்கரவாதிகளை என்.ஐ.ஏ தேடி வருகிறது. 


இவ்வழக்கில் தேடபட்டு வரும் ஜெய பிரகாஷ் என்ற பயங்கரவாதியைத் தமிழகத்தில் கூடலூரிலும், கேரளாவில் காசர்கோட்டிலும் கண்டதாக என்.ஐ.ஏ-விற்குத் தகவல் கிடைத்துள்ளது. மற்ற மூன்று சங் பரிவார் பயங்கரவாதிகள் ஆர்.ருத்திரா பாட்டில், டி.சாரங் அகோல்கர், ஆர்.பிரவின் லிம்கர் ஆகியோர்கள் கேரளத்திலும் கர்நாடகாவிலும் பதுங்கி இருக்கிறார்கள் என்ற தகவலும் என்.ஐ.ஏ-விற்குக் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இந்நான்கு பயங்கரவாதிகளைத் தேடும் பணியினைத் தீவிர படுத்தி உள்ளனர். சனாதன் சம்ஸ்தா என்ற பயங்கரவாத அமைப்பினர் 2008ல் தானேயில் வெடிகுண்டு தாக்குதலை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. அவ்வழக்கில் இவ்வமைப்பினைச் சேர்ந்த பல பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு சிலருக்குத் தண்டனை விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

என்.ஐ.ஏ தேடும் சனாதன் சம்ஸ்தா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நான்கு பயங்கரவாதிகளைப் பற்றிய தகவல் கிடைத்தால் கீழ்காணும் எண்களில் ஏதேனும் ஒன்றினைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும் படி என்.ஐ.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளது.
என்.ஐ.ஏ ஹைதராபாத் கட்டுப்பாட்டு அறை: 04127764488, 09493799335,09493799363,09493799354

- தகவல்: மணிவண்ணன்

-inneram.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza