Sunday, May 12, 2013

கட்டிட இடிபாடுகளில் சிக்கி 17 நாட்கள் கழித்து உயிருடன் வந்த பெண் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!


வங்கதேச தலைநகர் டாக்கா அருகில் 8 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 1080 பேர் பலியானதுடன் ஏராளமானோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மீட்புப் பணியும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் 17வது நாளாக நேற்று நடைபெற்ற மீட்புப் பணியின்போது, ஒரு பெண் உயிருடன் மீட்கப்பட்டார்.

ரேஷ்மி என்ற அந்தப் பெண் கட்டிட இடிபாடுகளில் மிகப்பெரிய தூணுக்கும், பீமுக்கும் இடையில் சிக்கியிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார்.
அவர் உயிருடன் இருபதை மீட்புக் குழுவினருக்கு தெரியப்படுத்த இரும்பு கம்பியை வைத்து தட்டி சத்தம் எழுப்பியுள்ளார்.
மீட்புப் குழுவினர் அவரை கண்டுபிடித்து 40 நிமிட போராட்டத்துக்குப் பின்னர் மீட்டனர். இவர் உடனடியாக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்தபடி வங்கதேச தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது ரேஷ்மி கூறுகையில், நான் எழுப்பிய சத்தத்தை யாரும் கேட்கவில்லை. அது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. நான் மறுபடியும் வெளியுலகை பார்ப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.
என்னைச் சுற்றி காய்ந்த உணவுப் பொருட்கள் இருந்தன. 15 நாட்களாக நான் அதைத்தான் சாப்பிட்டேன். சில தண்ணீர் டப்பாக்களும் இருந்தன.
கடைசி இரண்டு நாட்களுக்கு தண்ணீரைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அது தீர்ந்து விடக்கூடாது என்பதற்காக குறைந்த அளவே தண்ணீர் குடித்தேன். நான் உயிர் பிழைத்தது என் அதிர்ஷ்டம் என்று தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza