2007 ஆம் ஆண்டு அஜ்மீர் தர்காவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய இரண்டு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். 2002-ஆம் ஆண்டு பெஸ்ட் பேக்கரி வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளான ஜயந்த் கோஹ்லி என்ற உஸ்தாத், அவனது மகன் ரமேஷ் கோஹ்லி என்ற மகேஷ் ஆகியோர் குஜராத்தின் வதோதராவில் வைத்து கைதுச் செய்யப்பட்டனர். ஜயந்தைக் குறித்து தகவல் அளிப்பவருக்கு இரண்டு லட்சமும், ரமேஷைக் குறித்து தகவல் அளிப்பவருக்கு ஐந்து லட்சமும் பரிசுத்தொகையாக அளிக்கப்படும் என்று தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) அறிவித்திருந்தது.
கடந்த மாதம் கைதான ஜயந்தின் உறவினர் மஃபத் கோஹ்லியிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஜயந்த் கைதுச் செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவருடைய உறவினரும், இன்னொரு குற்றவாளியுமான ஹர்ஷத் கோஹ்லியை 2010-ஆம் ஆண்டு ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்புப் படை கைதுச் செய்திருந்தது. மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்புகளுக்கு சதித் திட்டம் தீட்டிய கும்பலின் அங்கமான ஹர்ஷத் தங்களின் தலைவனான சுனில் ஜோஷியை கொலைச் செய்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான். அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பிற்கு உபயோகித்த வெடிப்பொருட்களை சுனில் ஜோஷியின் உத்தரவின்பேரிலேயே இவர்கள் அனைவரும் இணைந்து கடத்தியதாக என்.ஐ.ஏ தெரிவிக்கிறது.
2002-ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி 14 அப்பாவி முஸ்லிம்களை கொடூரமாக எரித்துக் கொலைச் செய்த பெஸ்ட் பேக்கரி வழக்கில் 21 பேரை வதோதரா நீதிமன்றம் விடுவித்திருந்தது. இவ்வழக்கில் மேற்கண்ட ஹிந்துத்துவா தீவிரவாதிகள் குற்றவாளிகள் ஆவர்.ப் பெஸ்ட் பேக்கரி வழக்கை குற்றம் சாட்டப்பட்டவர்கள் சீர்குலைத்தை கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து குஜராத்திற்கு வெளியே வழக்கை நடத்தவேண்டும் என்று 2004-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் தலைமறைவாகினர்.
உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பெஸ்ட் பேக்கரி வழக்கின் விசாரணை மும்பை நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையின் இறுதியில் நான்குபேருக்கு ஆயுள்தண்டனையும், இதர ஐந்து பேருக்கு பல்வேறு சிறைத்தண்டனைகளும் அளிக்கப்பட்டன.
0 கருத்துரைகள்:
Post a Comment