புதுடெல்லி:காலனியாதிக்க ஆட்சியின் தொடர்ச்சியே அரசு பயங்கரவாதம் என்று பிரபல எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததிராய் கூறியுள்ளார்.
டெல்லி ராஜேந்திரபிரசாத் பவனில் நடந்த ‘மக்களுக்கு எதிரான போர்’என்ற கன்வென்சனில் கலந்துகொண்டு உரையாற்றினார் அவர்.
அவர் கூறியது:1947-ஆம் ஆண்டு இந்திய சுதந்திரமடைந்தவேளையில் காலனி அரசுதான் நாட்டில் அதிகாரத்திற்கு வந்தது. தெலுங்கானா, வங்காளம் உள்ளிட்ட நாட்டின் எல்லைக்குள்ளாகவே ராணுவத்தை அனுப்பி அரசு சொந்த குடிமக்களுக்கு எதிராக போரை நடத்தியது. இவ்வகையான போர்கள் இன்றும் தொடர்கின்றன. இந்திய அரசு உயர்சாதி அரசாகும். இந்த அரசின் குணத்தை வேறொன்றுடன் ஒப்பிட முடியாது. சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் நிலபிரபுத்துவம் மீண்டும் வருகிறது. முந்தைய காலங்களில் நடத்திய சீர்திருத்தங்களின் பலனாக ஏற்பட்ட நலன்கள் கூட பலம் பிரயோகித்து மக்களிடமிருந்து பிடுங்கபடுகின்றன. இதற்கெதிராக போராடுபவர்களுக்கு பெரியதொரு இமேஜ் இருந்தாலே வெற்றி பெற முடியும். உண்மையான ஆட்சியாளர்கள் மன்மோகன்சிங்கும், நரேந்திரமோடியும் அல்ல. டாட்டா, அம்பானி போன்ற தொழிலதிபர்கள்தாம் நாட்டை ஆளுகிறார்கள். ஆகையால்தான் முகேஷ் அம்பானிக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பேசிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் இ.எம்.அப்துல் ரஹ்மான் கூறியது: சட்டத்தை அமல்படுத்தும் அரசே அதனை மீறுகிறது. சட்டங்களை இலகுவாக்குவதுடன், கறுப்புச் சட்டங்களையும் அரசே உருவாக்குகிறது. அப்ஸா, யு.ஏ.பி.ஏ, உள்ளிட்ட கறுப்புச் சட்டங்களால் பாதிக்கப்படுபவர்கள் பழங்குடியினரும், தலித்துகளும், தொழிலாளர்களும், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் ஆவர்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் எஸ்.ஏ.ஆர்.கிலானி, அதித் பாதுரி, அபர்ணா, அசோக் பவுமிக், பி.டி.சர்மா, பாஷா சிங், ஜி.ஹர்கோபால், கரென் காப்ரியேல், சுமித் சக்ரவர்த்தி, புரட்சி கவிஞர் வரவர ராவ் ஆகியோர் உரையாற்றினர்.
-thoothu
-thoothu
0 கருத்துரைகள்:
Post a Comment