
வாஷிங்டன்:ஃபலஸ்தீனை சுதந்திர தேசமாக அங்கீகரித்து அந்நாட்டிற்காக தனி பக்கத்தை கூகில் உருவாக்கியுள்ளது. முன்னர் ஃபலஸ்தீன் எடிசன் ஹோம் பேஜின் பெயர் ஃபலஸ்தீன் பிரதேசம் என்பதாக இருந்தது. இம்மாதம் 1-ஆம் தேதி அதனை ஃபலஸ்தீன் என்று கூகிள் திருத்தம் செய்துள்ளது. கூகிளின் முடிவை ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் வரவேற்றுள்ளார்.கூகிள் லோகோவின் கீழ் பகுதியில் ஃபலஸ்தீன் என்று அரபியிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது. கூகிள் பி.எஸ் என்பது கூகிளின் ஃபலஸ்தீன் எடிசன் பெயராகும்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த நவம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் அவையில் சிறப்பு பார்வையாளர் அந்தஸ்து ஃபலஸ்தீனுக்கு அளிக்கப்பட்டது. பெயர் மாற்றத்திற்கு முன்பு பல நாடுகளுடனும் ஆலோசனை நடத்தியதாகவும், இக்காரியத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்தை சார்ந்திருப்பதாகவும் கூகிள் செய்தி தொடர்பாளர் நதான் டைலர் கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:
Post a Comment