லாஷியோ: பர்மாவின் வடகிழக்கு பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பர்மாவின் வடகிழக்கில் உள்ள ஷான் மாகாணத்தின் தலைநகர் லாஷியோ. இங்கு, புத்த மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை முஸ்லிம் ஒருவர் எரித்து கொன்றுவிட்டதாக வதந்தி பரவியதைத் தொடர்ந்து, முஸ்லிம்களுக்கு எதிராக புத்த மதத்தினர் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து ஏற்பட்ட மோதலில் முஸ்லிம்களின் மசூதிகள் மற்றும் கடைகளுக்கு தீவைக்கப்பட்டது. இதனால் அப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. சமீபத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் 200க்கு மேற்பட்டோர் அநியாயமாக கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-inneram
0 கருத்துரைகள்:
Post a Comment