யங்கூன்: மியான்மரில் ராக்கேன் மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு 2 குழந்தைகள் மட்டும் போதும் என்ற உள்ளூர் நிர்வாகத்தின் முடிவுக்கு எதிர்கட்சி தலைவர் ஆங்சாங் சூகி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு முதன் முதலாக சூகி கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்களிடம் இது குறித்து சூகி கூறுகையில், "கொள்கையை எவ்வாறு நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதுக் குறித்து எனக்கு தெரியாது. இத்தகைய முயற்சிகள் சட்டவிரோதமாகும். மக்களிடையே பாரபட்சம் காட்டுவது நல்லது அல்ல. மனித உரிமைகளை பரிசீலிக்காமல் அரசு இம்முடிவை எடுத்துள்ளது" என்று சூகி தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment