Thursday, May 2, 2013

சர்வதேச அளவில் உள்நாட்டுக்குள்ளேயே புலன்பெயரும் மக்கள் அதிகரிப்பு!


ஆயுத மோதல், வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்கள் காரணமாக உலகெங்கிலும் பல நாடுகளில் மக்கள் தங்கள் நாடுகளுக்குள்ளேயெ, முன்னெப்போதும் காணப்பட்டதை விட மிக அதிகமான எண்ணிக்கையில், தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறியுள்ளார்கள் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

கடந்த ஆண்டு இறுதியில் இதுபோல உள்நாட்டிலேயே புலன்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 28.8 மில்லியனாகும் என்று ஜெனிவாவில் உள்ள உள்நாட்டு இடப்பெயர்வு கண்காணிப்பு மையம் கூறுகிறது. சிரியாவில் மட்டுமே 2012ம் ஆண்டு இறுதி வாக்கில், 2.4 மில்லியன் பேர் உள்நாட்டுக்குள் புலன்பெயர்ந்துள்ளார்கள் என்று இந்த அமைப்பு கூறுகிறது.


கொலம்பியாவில்தான் மிக அதிகமான உள்நாட்டு புலன்பெயர்ந்தோர் இருக்கிறார்கள். அதற்கு அடுத்த இடத்தில் சிரியா வருகிறது. அதன் அடுத்த இடத்தில் காங்கோ ஜனநாயக குடியரசு வருகிறது. உள்நாட்டில் புலன்பெயர்ந்தோருக்கு, சர்வதேச எல்லைகளை கடந்து வெளியேறும் அகதிகளுக்கு இருக்கும் பாதுகாப்பான அந்தஸ்து கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza