Thursday, May 2, 2013

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்:உண்மை குற்றவாளிகள் தண்டிக்கபட வேண்டும்- பாப்புலர் ஃப்ரண்ட்


சென்னை : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலக கூட்டம் ஏப்ரல் 29 ம் தேதி மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் தலைமையில் சென்னையில் நடைபெற்றது . 

இச்செயலக கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கபட்டது . முடிவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது :

  • சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னிய இளைஞர் சித்திரைப் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. அவ்விழாவுக்கு பிறகு மரக்காணம் அருகேயுள்ள கிராமத்தில் இரு பிரிவனர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு பல குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டன. கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன . முஸ்லிம்களின் பள்ளிவாசல்களும், சொத்துகளும் சேதப்படுதபட்டுள்ளது. அங்குள்ள முஸ்லிம் மக்களும் தாக்கப்பட்டுள்ளனர். இதை வண்மையாக கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் கலவரக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , அது போல் பாதிக்க பட்டவர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணத்தை வழங்கிட வேண்டும் என்றும் இச்செயலக கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

  • சமீபத்தில் பெங்களூரு பா.ஜ.க அலுவலகம் அருகில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது, உண்மை குற்றவாளிகள் தண்டிக்கபட வேண்டும். ஆனால் நாட்டில் எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் அப்பாவி முஸ்லிம்களை கைது செய்வதையே வழக்கமாக காவல்துறை கடைப்பிடிக்கிறது. அதுபோல் பெங்களூரு குண்டு வெடிப்பிலும் தமிழகத்தை சார்ந்த கிச்சன் புஹாரி உட்பட 3 அப்பாவி முஸ்லிம் வாலிபர்களை காவல்துறை கைது செய்துள்ளதை இச்செயலக கூட்டம் கண்டிக்கிறது. அரசு உடனடியாக தலையிட்டு அப்பாவி முஸ்லிம்களை விடுவிக்க வேண்டும் என்றும், நாட்டில் எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் முஸ்லிம்களை கைது செய்யும் வழக்கத்தை உடனடியாக நிறுத்தவேண்டும் எனவும் அரசுக்கு இச்செயலக கூட்டம் வலியுறுத்துகிறது.

இப்படிக்கு

ஏ.காலித் முஹம்மது 
மாநில பொது செயலாளர் 
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
தமிழ்நாடு .

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza