பெங்களூர்: பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச்செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கேரள பி.டி.பி கட்சி தலைவர் அப்துல் நாஸர் மஃதனிக்கு நீதியும், மனிதநேய முன்னுரிமையும் வழங்க கோரி எஸ்.டி.பி.ஐயின் கேரள மாநில தலைவர்கள் கர்நாடகா மாநில முதல்வர் சித்தாராமைய்யாவை சந்தித்தனர்.
கடுமையான நோய்களால் அவதியுறும் அப்துல் நாஸர் மஃதனிக்கு உயர் தொடர் சிகிட்சை அளிக்கவும், வழக்கு நடவடிக்கைகளை வெளிப்படையாக நடத்தவும், ஜாமீன் வழங்கவும் அரசு அவசரமாக தலையிடவேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ தலைவர்கள் முதல்வர் சித்தாராமைய்யா மற்றும் உள்துறை அமைச்சர் கே.கே.ஜார்ஜ் ஆகியோருக்கு அளித்த மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.
கேரள மாநில எஸ்.டி.பி.ஐ தலைவர் வழக்கறிஞர் கே.எம்.அஷ்ரஃப், பொதுச் செயலாளர் நாஸருத்தீன் ஆகியோர் கர்நாடகா முதல்வரையும், உள்துறை அமைச்சரையும் சந்தித்தனர். ஆட்சி மாறிய பிறகு மஃதனிக்கு நீதிக்கோரி கேரளாவில் இருந்து முதல்முறையாக எஸ்.டி.பி.ஐ தலைவர்கள் கர்நாடகா முதல்வரை சந்தித்துள்ளனர்.
கடந்த பா.ஜ.க அரசின் விருப்பத்திற்கு ஏற்ப மஃதனிக்கு முற்றிலும் நீதியை மறுக்கும் அணுகுமுறையை கர்நாடகா போலீஸ் கையாண்டதாக எஸ்.டி.பி.ஐ தலைவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மஃதனிக்கு சிகிட்சைக்கான ஏற்பாடுகளை முடிந்தவரை செய்வோம் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளதாக சந்திப்பிற்கு பிறகு எஸ்.டி.பி.ஐ தலைவர்கள் தெரிவித்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment