Wednesday, May 15, 2013

காவல் துறையில் முஸ்லிம்கள் - மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்திய ஆந்திர அரசு!


ஆந்திரப் பிரதேச அரசின் தலைமைச் செயலாளரான மின்னி மேத்யூ அனைத்துத் துறைத் தலைவர்களுக்கும் வழங்கியிருக்கும் உத்தரவில் பிரதமரின் சிறுபான்மையினர் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த 15 அம்சத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்றும், சிறுபான்மை நலத் திட்டங்களுக்காக அரசின் அனைத்து துறைகளும் மொத்த பட்ஜெட்டில் 15 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், காவல்துறை வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடங்களை உறுதிப்படுத்துமாறும் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ள மின்னி மேத்யூ, முஸ்லிம்கள் காவல்துறைக்கான வேலை வாய்ப்புகளுக்கு முன்வருவதில்லை என்ற போலீஸ் அதிகாரிகளின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரி வித்துள்ளார்.

முன்னாள் தலைமைச் செயலாளர் பங்கஜ் நிவேதி கடந்த 2012 ஜூன் மாதம் ஓய்வு பெற்ற தையடுத்து மின்னி மேத்யூ தலைமைச் செயலாளராக நியமிக்கப் பட்டிருக்கிறார்.
கடந்த 17ம் தேதி ஆந்திர அர சின் தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில் 17 துறைகள் கலந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆய்வுக் கூட்டம், ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி கலந்து கொள்ளவிருக்கின்ற கண் காணிப்புக் குழுக் கூட்டத்திற்கு முன்னதாக நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் கலந்து கொள்ளவிருக்கும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் இம்மாதம் இறுதியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தில் சிறுபான்மையினர் நலவளர்ச்சித் திட்டங்கள் குறித்து முதல்வர் ஆய்வு செய்வார் என்று கூறப்படுகிறது.
தலைமைச் செயலாளர் மின்னி மேத்யூ தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து துறைத் தலைவர்களும், சிறுபான்மையினர் வளர்ச்சி குறித்த பிரதமரின் 15 அம்சத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவது தொடர்பாக தங்கள்துறைகளின் அறிக்கையை தாக்கல் செய்தனர்.
இதில் அரசுத்துறைகளின் தலைவர்கள் பலர், தங்கள் துறைகளின் ஒட்டுமொத்த பட்ஜெட்டில் சிறுபான்மையினர் 15 சதவீ தம் ஒதுக்கீட்டை பெற்று வருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். சில விஷயங்களில் இந்த இலக்கு எட்டப்படவில்லை என்றாலும் அவற்றையும் ஈடு செய்வதாகவும் அவர்கள் தலைமைச் செயலாளரிடம் உறுதியளித்துள்ளனர்.
இக்கூட்டத்தில் சிறுபான்மையினர் சொந்தத் தொழில் தொடங்குவதற்காக ஒரு லட்சம் குடும் பங்களுக்கான கடனுதவி வழங்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள் ளது என தெரிவித்துள்ள மின்னி மேத்யூ,
சிறுபான்மையினருக்கான பட் ஜெட் ஒதுக்கீடு உயர்த்தப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டி, சிறு பான்மையினருக்கு ஒதுக்கப்பட் டுள்ள பட்ஜெட் முறையாக பயன்படுத்துவதில் அரசு தீவிர மாக இருக்கிறது. சிறுபான்மையி னருக்கான நலத் திட்டங்களின் நன்மைகள் பயனாளிகளுக்கு முழுமையாக கிடைக்க வேண் டும். சில துறைகள், சிறுபான்மை மக்களுக்கு மொத்த பட்ஜெட் டில் 15 சதவிதம் ஒதுக்கு வதில் சிரமங்கள் இருப்பதாகத் தெரி வித்துள்ளனர். அதை ஏற்க முடி யாது. எப்படியாவது இந்த இலக்கை அடைந்தே தீர வேண் டும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், சிறுபான்மை நலத்துறையின் முதன்மைச் செயலாளர், காவல் துறையில் முஸ்லிம்களுக்கான 4 சதவீத ஒதுக்கீடு பின்பற்றப்படுவ தில்லை என புகார் வாசித்தார். அப்போது, ஆள்சேர்ப்பு விதிகள் 1999ன் படிதான் காவல்துறை பணி இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த விதிகளில் சிறுபான்மையி னருக்கு இட ஒதுக்கீட்டிற்கென எதுவும் சொல்லப்படவில்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு, அந்த விதிமுறைகளை திருத்துங்கள் என மின்னி மேத்யூ அவர்களை கேட்டுக் கொள்ள... காவல்துறையில் ஆட்சேர்ப்பின் போது சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதற்காக முன் வருவதில்லை என காவல்துறை அதிகாரிகள் மீண்டும் கூற... நீங் கள் முதலில் 4 சதவீத ஒதுக் கீட்டை வழங்குங்கள் அதன் பின் னர் அவர்கள் தானாக முன் வரு வார்கள் என அவர்களுக்கு பதில ளித்திருக்கிறார் தலைமைச் செய லாளர் மின்னி மேத்யூ.
பிரதமரின் 15 அம்ச திட்டங்க ளின் வழிகாட்டு நெறிமுறைப் படி, ஒவ்வொரு மூன்று மாதத்திற் கொருமுறை கண்டிப்பாக ஆய் வுக் கூட்டம் நடத்தப்பட வேண் டும். ஆந்திர மாநில அரசின் கடைசி ஆய்வுக் கூட்டம் கடந்த ஜூலை மாதம் 2012ல் நடைபெற் றது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமைச் செயலாளர் மின்னி மேத்யூ தலைமையில் நடைபெற்ற மேற்கண்ட ஆய்வுக் கூட்டத்தில் கல்வித்துறை அதிகா ரிகள், பாலி டெக்னிக் கல்வி நிறு வனங்களில் சிறுபான்மை மாண வர்களின் சேர்க்கையின்போது 4 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத் தப்படுகிறது என தெரிவித்தனர். அப்போது, சிறுபான்மை மாண வர்களுக்கு பள்ளிக் கூடங்களில் 15 சதவீத சேர்க்கையை உறுதிப்ப டுத்த வேண்டும் என உத்தரவிட்ட மின்னி மேத்யூ, குழந்தைகளின் பெற்றோர்கள், தங்களது குழந்தை களை பள்ளிக்கு அனுப்ப அங்கன்வாடி மூலமாக கட்டாயப்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை நலத் திட்டங் களை பயன்படுத்திக் கொள்வது பற்றி சிறுபான்மை மக்களுக்கு மத்தியில் விழிப்புணர்வை ஏற்ப டுத்த வேண்டும் என இந்த ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட் டது.
இக்கூட்டத்தில் சிறுபான்மை நலத்துறை ஆணையர் முஹம்மது அப்துல் வாஹித், கூடுதல் காவல் துறை தலைவர் அன்வாருல் ஹுதா ஐ.பி.எஸ்., உள்துறை முதன் மைச் செயலாளர் டி.பி. தாஸ் ஐ.ஏ.எஸ். மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருக் கின்றனர்.
சிறுபான்மை மக்களின் நலத் திட்டங்கள் மீதான ஆந்திர அர சின் இந்த வேகம் பாராட்டுக்குரி யது. ஆந்திர அரசைப் பின்பற்றி, தமிழக அரசும் பிரதமரின் சிறு பான்மை நலத் திட்டங்கள் அம் மக்களுக்கு பயன்படுத்தப்படுகி றதா என்பதையும், காவல்துறை உள்ளிட்ட இதர அரசுத்துறை களில் 3.5 சதவீத இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுகிறதா என ஆய்வுக் கூட்டம் நடத்தி உறுதி செய்ய வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார் கள்.
மேலும், ரங்கநாத் மிஸ்ரா கமி ஷன் பரிந்துரையின்படி, முஸ்லிம் கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முஸ்லிம் இன்ஸ்பெக்டர் அல்லது சப் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட வேண்டும். இதற்கான முன் முயற் சிகளை அனைத்து மாநில அரசுக ளும் எடுக்க வேண்டும் என மத் திய அரசு உத்தரவிட வேண்டும்.
மாநில அரசுகளே பொறுப்பு!
முஸ்லிம்கள் பெரும்பான்மை கொண்ட பகுதிகளில், முஸ்லிம் போலீஸ் அதிகாரிகளை நியமிக்க வேண் டும் என்கிறமத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் மட்டத்திலான வழிகாட்டுதலுக்கு ஏற்ப செயல்படுத் துவது என்பது இந்த நாட்டில் கடினமான விஷயமாகவே உள் ளது.
ஏனெனில் போலீஸ் சேவையில் முஸ்லிம்களின் பிரதிநிதுத்துவம் மிக மிக குறைந்த எண்ணிக்கையில்தான் இருக்கிறது. முஸ்லிம் பகுதிகளில் நியமிக்கப்ப டும் அளவிற்கு காவல்துறையில் போதுமான அளவிற்கு முஸ்லிம்களின் எண் ணிக்கை இல்லை என்பதையே இது நிரூபிப்பதாக உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளி விபரப்படி, நாட்டின் ஒட்டு மொத்த போலீஸ் படையான 16.6 லட்சத்தில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர் நிலையில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை 1.08 லட்சம்தான்.
அதாவது, நாட்டின் ஒட்டுமொத்த காவல்துறையினரில் முஸ்லிம்களின் பிரதிநி தித்துவம் என்பது வெறும் 6 சதவீதம்தான் இருக்கிறது. ஆனால் யதார்த்த உண்மை என்னவென்று பார்த்தால் 4 சதவீதத்திற்கும் குறைவான பிரதிநிதித்துவம்தான் இருக் கிறது.
ஏனெனில், ஒட்டுமொத்த 1.08 லட்சம் முஸ்லிம் போலீசாரில் ஏறக்குறைய பாதி அளவிற்கு அதாவது 46,250 பேர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணியில் ஈடுபட்டுள் ளனர்.
அதிகாரப்பூர்வ புள்ளிவிபரக் கணக்குபடி, டெல்லியில் முஸ்லிம் போலீஸ் அதிகா ரிகளின் எண்ணிக்கை மோசமாக அல்லது மிக குறைந்த அளவில்தான் இருக்கிறது.
டெல்லி காவல்துறையினரின் மொத்த எண்ணிக்கையான 75,117 பேரில் முஸ் லிம் போலீஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 1,521 தான். இது, டெல்லி காவல் துறை யில் முஸ்லிம் அதிகாரிகளின் பங்களிப்பு என்பது 2 சதவீதத்தைக் காட்டுகிறது.
எனவே மத்திய உள்துறை செயலாளரின் வழிகாட்டுதல்படி, இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் ரேங்க் முஸ்லிம் அதிகாரிகளை (முஸ்லிம் பகுதிகளில்) நியமிப்பது என்பது சாத்தியமாகாது.
போலீஸ் அதிகாரிகள் பற்றிய சமீபத்திய புள்ளி விபரத்தை வெளியிட்டிருந்த ஒரு ஆங்கில நாளேடு, முஸ்லிம்களின் குறைந்த பிரதிநிதித்துவம் குறித்து உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கவலை தெரிவிப்பதாக எழுதியிருந்தது.
நீதிபதி சச்சார் கமிட்டியின் 2006ம் ஆண்டு அறிக்கை கூட அரசுத்துறைகளிலும், காவல் படையிலும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைந்த அளவில் இருக் கிறது என்று அடையாளப்படுத்தியிருந்தது.
இந்த கமிட்டி, முஸ்லிம் பெரும்பான்மை பகுதிகளில் முஸ்லிம் அதிகாரிகளை நிய மிப்பது அவசியம் என பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை கருத்தில் கொண்டு முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட பகுதிகளில் முஸ்லிம் போலீஸ் அதிகாரி களை நியமிக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியிருந்தது மத்திய அரசு.
“காவல்துறையில் முஸ்லிம்களின் குறைந்த அளவு பிரதிநிதித்துவத்திற்கு மாநில அரசுகளே பொறுப்பு; காவல்துறையில் முஸ்லிம்களை சேர்க்கும் செயற்பாடுகளில் மாநில அரசுகள் மந்தமாக செயல்படுகின்றன...'' என்று கூறும் தேசிய சிறுபான்மை கமிஷனின் தலைவரான வஜாஹத் அப்துல்லாஹ்,
“பிரதமரின் 15 அம்ச திட்டத்தில், காவல்துறையில் பணியமர்த்தலின்போது, சிறு பான்மை முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண் டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால், இந்த அறிவுறுத்தல்களை மிகச் சில மாநில அரசுகளே அமல்படுத்தி யுள்ளன (ஆந்திர அரசு சமீபத்திய உதாரணம்). சச்சார் கமிட்டி அறிக்கையின்படி முஸ் லிம்களின் எண்ணிக்கை பெரும் அளவில் உள்ள உத்திரப் பிரதேசம், பீஹார் போன்ற மாநிலங்களில் முஸ்லிம் அதிகாரிகளின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் உள் ளது.
ராஜஸ்தான் காவல்துறையில் முஸ்லிம்கள் ஒரு சதவீதமே உள்ளனர். இதனால், பிரச்சினைகளை கையாளும்போது போலீஸ் பக்கச் சார்பு கொண்டதாக ஆகி விடு கிறது. ஐ.பி.எஸ். மட்டத்திலான முஸ்லிம் அதிகாரிகளின் தேவை தற்போது அவசியமா கிறது. ஆனால் அதே சமயம், கான்ஸ்டபிள் அந்தஸ்தில் முஸ்லிம் அதிகாரிகளை சேர்ப்பது என்பது மிக மிக அவசியம்...'' என்கிறார் கவலையுடன்!
காவல்துறையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம்
மாநிலங்கள்                                    காவல்படை           முஸ்லிம்                                  சதவீதம்                                                                                                                                                                
                                                                                                                                      அதிகாரிகள் 
டெல்லி                                                   75,117                         1,521                                       2
மஹாராஷ்டிரா                                  1,82,971                      1,945                                       1
உத்திரப் பிரதேசம்                             1,87,425                      9,166                                       4.8
பீஹார்                                                    65,476                         3,084                                       4.5
ஆந்திரப் பிரதேசம்                             89,404                         8,933                                       10
கர்நாடகா                                               74,699                         4,796                                       6.4
ராஜஸ்தான்                                          76,356                         954                                          1.2
ஜம்மு & காஷ்மீர்                                 76,805                        46,250                                     60
இந்திய அளவில்                                 16,60,151              1,08,389                                     6
- நன்றி : மில்லிகெஜட்
இது 2012ம் ஆண்டின் புள்ளிவிபரம் ஆகும். இதில் தமிழகம் உள்பட பல மாநிலங்க ளின் புள்ளி விபரங்கள் இல்லை. 8 மாநிலங்களின் புள்ளி விபரங்கள் மட்டுமே இவை. தமிழகத்தைப் பொறுத்தவரை தேசிய குற்றப் பதிவுத்துறையின் 2004 அறிக்கை 88,524 காவல்துறையினரில் முஸ்லிம் அதிகாரிகளின் எண்ணிக்கை வெறும் 99 மட்டுமே என்கிறது.
2001 சென்செஸ் அடிப்படையில், 2004 ஆண்டின் தேசிய குற்றவியல் பதிவுத் துறை மூலம் பெறப்பட்ட முஸ்லிம்களின் மக்கள் தொகை கணக்கு மற்றும் காவல்து றையில் அவர்களின் பங்கு (சதவீத அளவில்) குறித்து 2006ம் ஆண்டு பிரண்ட் லைன் ஆங்கில இதழ் வெளியிட்ட தகவல் இது.
மாநிலம்    மொத்தமக்கள்தொகையில காவல்துறையில்முஸ்லிம்களினஎண்ணிக்கை                
ஆந்திரப் பிரதேசம்                                             9.17                 13.25
அஸ்ஸாம்                                                          30.92               10.55
பீஹார்                                                               16.53               5.94
குஜராத்                                                              9.06                 5.94
ஜம்மு & காஷ்மீர்                                            66.97               56.36
கர்நாடகா                                                          12.23               6.71
கேரளா                                                               24.70               12.96
மஹாராஷ்டிரா                                             10.60               4.71
தமிழ்நாடு                                                          5.56             0.71
திரிபுரா                                                               7.95                 2.01
உத்திரப் பிரதேசம்                                        18.50               4.24
மேற்கு வங்கம்                                               25.25               7.32
டெல்லி                                                               11.72               2.26
இதில் தமிழகத்தில் காவல் சேவையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் வெகுவாகக் குறைந்து காணப்படுகிறது.
Source: keetru

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza