கெய்ரோ: ஃபலஸ்தீனில் பிரபல அமைப்புகளான ஹமாஸ் மற்றும் ஃபத்ஹ் ஆகியவற்றிற்கு இடையே ஐக்கிய உடன்படிக்கையை அமல்படுத்துவது தொடர்பாக எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸியும், ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸும் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இரு பிரிவினரும் ஏற்றுக்கொண்ட இடைக்கால அரசை உருவாக்குவது பேச்சுவார்த்தையின் முக்கிய
அஜண்டா என்று ஃபத்ஹ் குழுவின் தலைவர் அஸ்ஸாம் அல் அஹ்மத் கூறியுள்ளார்.
அஜண்டா என்று ஃபத்ஹ் குழுவின் தலைவர் அஸ்ஸாம் அல் அஹ்மத் கூறியுள்ளார்.
தேர்தல், பாதுகாப்பு, ஃபலஸ்தீன் விடுதலை இயக்கத்தின்(பி.எல்.ஒ) புனரமைப்பு ஆகியவை குறித்தும் இரு தலைவர்களும் விவாதிப்பார்கள். ஃபத்ஹ் தலைவரான மஹ்மூத் அப்பாஸும், ஹமாஸ் தலைவர் காலித் மிஷ்அலும் எகிப்து மத்தியஸ்தம் வகிக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment