சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் உலகிலேயே மிகவும் சொகுசான தொடர்வண்டி நிலையம் அமைக்கப்படவுள்ளது.
பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள இந்தத் தொடர்வண்டி நிலையம் சவூதி அரேபியாவின் செல்வசெழிப்பை எடுத்துக்காட்டும் வகையில் நான்கே ஆண்டுகளில் அமைக்க சவூதி மன்னர் அப்துல்லாஹ் உத்தரவிட்டுள்ளார்.
தற்சமயம் சவூதி அரேபியாவில் தொடர்வண்டி போக்குவரத்து அதிகமில்லை. தலைநகர் ரியாத்துக்கும் கிழக்கு மாகாண நகரங்களுக்குமிடையே ஓரிரு தொடர்வண்டிகள் மட்டும் இயக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. உலகின் பல பெரும் நகரங்களிலும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்க, மெட்ரோ வசதிக்கு ரியாத்வாசிகளும் ஏங்கிக்கொண்டிருந்தனர்.
சவூதி அரசு அறிவித்துள்ளபடி, ரியாத் நகரின் ஏழு நட்சத்திர அந்தஸ்த்தில் பெரும் தொடர்வண்டி நிலையம் ஒன்றும் ஆறுவழிப்பாதைகளில் மெட்ரோவும் அமைக்கப்பட உள்ளதாம். தொடர்வண்டிநிலையத்தின் தரைகள் மார்பிள்களும், சுவர்களில் ஆங்காங்கே தங்கத் தகடுகளும் பதிக்கப்படுமாம். முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட உள்ள இந்நிலையத்தில் விமானநிலையத்தினை மிஞ்சும் சொகுசு இருக்குமாம். பாலைவன மணல் வரிவடிவங்களைப் போன்று கூரை அழகுற அமைக்கப்படுமாம்.
உலகில் இப்படியொரு தொடர்வண்டி நிலையம் அமைக்கப்பட்டதில்லை என்று சொல்லும் அளவிற்கு மிக ஆடம்பரமாகவும், பிரம்மாண்டமாகவும் இந்தத் தொடர்வண்டிநிலையம் அதுவும் நான்கே ஆண்டுகளில் அமைக்கப்பட உள்ளதாம். நியூயார்க்கில் கூட இந்த வேகத்தில் புனரமைப்பு செய்ய முடியாது என்று கூறப்படுகிறது.
-inneram.com
0 கருத்துரைகள்:
Post a Comment