இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது புத்தர்களால் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், முஸ்லிம்களுக்கு எதிராக சில புத்தர்கள் சகிப்புத் தன்மையற்று செயற்படுவதாகவும்
அமெரிக்க அரசுத்துறையின் 2012 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திர அறிக்கை கூறியுள்ளது.
கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது கடுமையான தாக்குதல்களை புத்தர்கள் நடத்துவதாகவும், அவர்கள் கட்டாய மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டுவதாகவும் அது குறிப்பிடுகிறது. இத்தகைய செயற்பாடானது அங்கு ஒருவிதமான சமூக பதற்றத்துக்கு வழி செய்வதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிராகவும் சில புத்தர்கள் மத்தியில் சகிப்பின்மையும், பக்கசார்பும் வளர்ந்து வருவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment