மேட்டுப்பாளையம்: கோவை வடக்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மேம்பாட்டு துறை சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா பொதுக்கூட்டம் மற்றும் இலவச தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மேட்டுப்பாளையம் பெரிய பள்ளிவாசல் அருகில் மஜீத் திடலில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கோவை வடக்கு மாவட்ட தலைவர் A.S. ஷபீக் அஹமது தலைமை தாங்கினார். சமூக மேம்பாட்டு துறை பொறுப்பாளர் அஸ்ரப் கிராஅத் ஓதினார். கோவை வடக்கு மாவட்ட செயலாளர் A. காஜா மைதீன் வரவேற்றார். ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில பொதுச்செயலாளர் அப்துல் கபூர் மன்பஈ வாழ்த்துரை வழங்கினார்.
இவ்விழாவில் பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் A.S. இஸ்மாயீல், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் அஹமது பக்ருதீன், SDPI கட்சியின் மாநில செயலாளர் V.M. அபுதாகிர் மற்றும் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில துணைச்செயலாளர் ஹபீபுன்னிஷா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இவ்விழாவில் ஆம்புலன்ஸ்(முதலுதவி ஊர்தி) மேட்டுப்பாளையம் பொதுமக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. மேலும் விதவை பெண்ணுக்கு இலவச தையல் எந்திரம் வழங்கப்பட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாஅத் தலைவர் T.H. முஹம்மது குட்டி, மேட்டுப்பாளையம் காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் P.B. ஹம்ஸா, மஸ்ஜிதே நூர் பள்ளிவாசல் துணைத் தலைவர் அப்துல் லத்தீப், SDPI கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் காதர் பாட்ஷா, கேம்பஸ் ஃப்ரண்டின் மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் ஜெமிஷா மற்றும் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாவட்ட தலைவர் ஷனோபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாப்புலர் ஃப்ரண்டின் கிழக்கு நகரத் தலைவர் M.E. ஹக்கீம் நன்றியுரையாற்றினார். பாப்புலர் ஃப்ரண்டின் மேற்கு நகரத் தலைவர் ஜாபர் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாவட்ட செயலாளர் சபுராம்மா, SDPI கட்சியின் வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் நஜ்முதீன், பாப்புலர் ஃப்ரண்டின் கிழக்கு நகர செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மேற்கு நகர செயலாளர் நவ்ஃபல் மற்றும் பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment