Wednesday, May 22, 2013

காலித் முஜாஹித் மரணம்: விசாரணை நடத்தக் கோரி உ.பி மாநில சட்டப்பேரவையை நோக்கி எஸ்.டி.பி.ஐ பேரணி!



லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் 2008 டிசம்பரில் எஸ்.டி.எஃப் படையினரால் கைதுச் செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர் காலித் முஜாஹிதின் மர்மமான கஸ்டடி மரணம் குறித்து விசாரணை நடத்தக்கோரி சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா(எஸ்.டி.பி.ஐ) உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவையை நோக்கி பேரணி நடத்தியது.

பேரணியை சட்டப்பேரவை கட்டிடத்தின் 100 மீட்டருக்கு முன்பாக போலீஸ் தடுத்து நிறுத்தியது. ‘முந்தைய மாயாவதி அரசால் நியமிக்கப்பட்ட நிமேஷ் கமிஷன், காலித் முஜாஹிதும், அவருடன் கைதுச் செய்யப்பட்ட டாக்டர்.தாரிக் காஸ்மியும் நிரபராதிகளன்று கண்டறிந்த பிறகும் தற்போதைய அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதிக் கட்சி அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று எஸ்.டி.பி.ஐ கூறுகிறது.


நிமேஷ் கமிஷன் அறிக்கையை உடனடியாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவேண்டும், தாரிக் காஸ்மியை உடனடியாக விடுதலைச் செய்யவேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து எஸ்.டி.பி.ஐ பேரணி நடத்தியது.

இப்பேரணிக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் உ.பி மாநில தலைவர் வழக்கறிஞர் ஷரஃபுதீன் அஹ்மத், லக்னோ மாவட்ட தலைவர் முஹம்மது ரஈஸ் ஆகியோர் தலைமை வகித்தனர்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza