Tuesday, May 21, 2013

கீழக்கரையில் SDPI சார்பாக கலந்துரையாடல் நிகழ்ச்சி மற்றும் பத்திரிக்கையாளர்கள் சந்த்திப்பு!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நேற்று (20.05.2013) SDPI சார்பாக ஜமாத்தார்கள், உலமாக்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்ட ச‌மூக‌ ந‌ல‌ன் குறித்த‌ க‌ல‌ந்துரையாட‌ல் நிக‌ழ்ச்சி கீழ‌க்க‌ரை ஹுசைனியா ம‌ஹாலில் ந‌டைபெற்ற‌து.

 இந்நிகழ்ச்சிக்கு SDPI மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாக‌வி தலைமை வகித்தார். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும்  சிறுபான்மையின மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டியதன் அவசியத்தையும், தேசிய அளவில் SDPI-யின் செயல்பாடுகளையும் SDPI நிர்வாகிகள் அழகியமுறையில் எடுத்துரைத்தனர். மேலும் சமூக முன்னேற்றத்திற்கு தேவையான பல ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு சகோதரர்கள் முன் வைத்தனர். இந்நிகழ்ச்சியில் தி.மு.க நகர் செயலாளர் சகோ.பஷீர், SDPI மாநில பொது செயலாளர் B.அப்துல் ஹமீது மற்றும் SDPI இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள், கீழக்கரை ஜமாத்தார்கள், கீழக்கரை வாழ் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியின் இறுதியில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் SDPI மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாக‌வி முன்னிலையில் SDPI கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். பிறகு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பத்திரிக்கை துறையை சார்ந்த நண்பர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் மாநில‌ த‌லைவ‌ர் கே.எஸ்.எம்.தெஹ்லான் பாக‌வி  த‌லைமையில் நிர்வாகிக‌ள் உள்ளிட்டோர் கீழ‌க்க‌ரையில் ஹச்.எஸ்.அப்துல் காத‌ர் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு பிர‌முக‌ர்க‌ளையும் நேரில் ச‌ந்தித்த‌ன‌ர்.

 இந்நிகழ்ச்சிகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கீழக்கரை SDPI நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் சிறப்பாக செய்திருந்தனர். 

முன்னதாக காலையில் நடைபெற்ற SDPI கீழக்கரை நகர் தலைவர் இல்ல திருமண விழாவில் SDPI  நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.







- puduvalasai news exclusive

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza