Saturday, May 11, 2013

பெங்களூர் குண்டுவெடிப்பு கைது! இஸ்லாமிய கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்!


பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாக அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்து, சென்னையில் இன்று அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாக அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்து, சென்னை சேப்பாக்கத்தில் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள் பேசும்போது; தமிழகத்தில் முஸ்லிம் இளைஞர்களை குறிவைத்து தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கு தொடர்கிறது. கடந்த ஏப்ரல் 17 அன்று பெங்களூருவில் பா.ஜ.க அலுவலகத்திற்கு முன் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இது கண்டிக்கத்தக்கது, இதில் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இவ்வழக்கில் நடந்த சமீபத்திய கைது நடவடிக்கைகள் முஸ்லிம் சமுதாயத்தைக் குறிவைத்தே திட்டமிட்டு நடத்தப்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றனர்.
குண்டு வெடிப்பு சம்பவத்துடன் வேண்டுமென்றே தொடர்புபடுத்தப்பட்டு மேலப்பாளையத்தை சேர்ந்த கிச்சான் புகாரி உள்ளிட்ட சில முஸ்லிம் இளைஞர்களை தமிழக காவல்துறை கைது செய்து கர்நாடக காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளது. இது பாரபட்சமான, நியாயமற்ற நடவடிக்கையாகும். பொதுவாகவே ஒரு வழக்கில் காவல்துறையின் விசாரணை என்பது மனமாச்ரியங்களுக்கு இடம் கொடுக்காமல் எல்லா கோணத்திலும் நடைபெறவேண்டும்.
இதற்கு முன் நாட்டில் நடைபெற்ற மாலேகான், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், ஜெய்பூர் என பல குண்டு வெடிப்பு வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பல வருட சிறைவாசத்திற்குப் பின் அப்பாவிகள் என விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவ்வழக்குகளில் சங்பரிவார அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர்.
கான்பூர், தென்காசி உள்ளிட்ட பல குண்டுவெடிப்பு வழக்குகளில் கையும் களவுமாக பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்புகள் கைது செய்யப்பட்டுளனர். பெரும்பாலான மீடியாக்களும், காவல்துறையும், உளவுத்துறையும் இது போன்ற குண்டுவெடிப்பு வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிராக ஒருசார்பான போக்கையே கடைபிடிக்கின்றன.
இந்நிலையில் அரசியல் ஆதாயத்திற்காக முஸ்லிம் இளைஞர்கள் மீது தீவிரவாத குற்றச்சாட்டு சுமத்தி பொய்வழக்கில் கைது செய்வது போன்று தமிழகத்திலும் இந்த நிலை உருவாக்குவது வேதனைக்குரியது.
வகுப்புவாத உணர்வின்றி செய்ய வேண்டிய இந்த உளவுத்துறையினரும் காவல்துறையினரும் கடந்த 2 ஆண்டுகளாக பல சந்தர்பங்களில் ஒரு சார்பாக சங்பரிவார அமைப்புடன் கைகோர்த்து செயல்பட்டு கொண்டிருப்பதும் தமிழக முதல்வரின் கவனத்தை எட்டுகிறதா என்பது தெரியவில்லை. அதேபோல் முஸ்லீம்கள் குறித்து சரியான, நேர்மையான தகவல்கள் அறிக்கைகள் தமிழக முதல்வருக்கு உளவுத்துறையினர் சமர்பிக்கப்படுவாதகவும் தெரியவில்லை.
காவல்துறையை தன் பொறுப்பில் வைத்துள்ள தமிழக முதல்வர் அவர்கள் உளவுத்துறையும், காவல்துறையையும் சீரமைக்க வேண்டுமெனில் சிறுபான்மை விரோதபோக்கு மற்றும் வகுப்புவாத மனநிலையுடன் செயல்படும் உளவுத்துறை மற்றும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் வேண்டுமென்றே கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுவிக்க முதல்வர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம். என்றனர்.
இதையடுத்து காவல்துறை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்களை கைது செய்ய முற்பட்டபோது, கலந்து கொண்ட அனைவரும் எங்களையும் சேர்த்து கைது செய்ய வேண்டும் என்று கூறி தர்ணா செய்தனர். இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டனர்.




-newindia

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza