அமெரிக்காவில் நடைபெறவுள்ள பிஸ்டல் சுடும் உலகக் கிண்ண போட்டியில் (ISSF World Cup) இந்திய அணி கலந்து கொள்கிறது. இந்த அணியுடன் செல்ல வேண்டிய பயிற்சியாளருக்கு அமெரிக்க விசா தரமுடியாது என மறுத்துள்ளது, டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம்.
இந்திய பிஸ்டல் டீமின் பயிற்சியாளரின் பெயர், சையத் வாஜித் அலி! மத்திய வெளியுறவுத்துறை அமெரிக்க தூதரகத்துக்கு சிபாரிசு கடிதம் கொடுத்த பின்னரும், இந்திய டீமின் பயிற்சியாளருக்கு விசா கொடுக்க முடியாது என்று மறுத்துள்ள அமெரிக்க தூதரகம், தமது மறுப்புக்கான காரணம் எதையும் தெரிவிக்கவில்லை.
-viruviruppu
0 கருத்துரைகள்:
Post a Comment