Sunday, April 14, 2013

ஸ்வீடனில் பாங்கு சொல்ல அனுமதி !


நாத்திகர்களால் ஆத்திகர்களின் பல வழிபாட்டு தலங்கள் முன்பு ஆக்கிரமிக்கப்பட்டன. அவை நூலகங்களாகவும் அரசு அலுவலகங்களாகவும் மாற்றப்பட்டன. நாத்திகத்தில் மன அமைதி கிடைக்காத பலர் இன்று ஆத்திகத்தின் கதவை தட்ட ஆரம்பித்துள்ளனர். ஸ்வீடனில் உள்ள ஃபித்ஜா மசூதியில் இனி வரும் காலங்களில் வெள்ளிக் கிழமைகளில் ஒலி பெருக்கி மூலம் அதான் (தொழுகைக்கான அழைப்பு) கொடுத்துக் கொள்ளலாம் என்ற அனுமதி கிடைத்துள்ளது. இனி பள்ளியின் மினாராக்களில் பாங்கின் அழைப்பொலி அந்த அழகிய நகரை அலங்கரிக்கும்.

'நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன். பாங்கு சொல்ல அனுமதி கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்' என்கிறார் போத்கிர்கா முனிசிபாலிடியின் இஸ்லாமிய அமைப்பின் தலைவர் இஸ்மாயில். மதியம் 12 லிருந்து ஒரு மணிக்குள் ஒலி பெருக்கி மூலம் தொழுகைக்கான அழைப்பைக் கொடுத்துக் கொள்ளலாம் என்று காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. மெல்ல இந்த அனுமதியானது முன்பு நாத்திகர்களால் பூட்டப்பட்ட பல மசூதிகளுக்கும் பரவும் என்று எதிர்பார்க்கலாம். ஏனெனில் அந்த அளவு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதில் மக்கள் ஆர்வமுடன் உள்ளனர். 

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

தகவல் உதவி: சவுதி கெஜட்.

-Jaffna muslim's

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza