இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைக்கான கருத்தரங்கு ஒன்று சென்னை எழும்பூர் கென்னட் லேன் ஹோட்டல் சிங்கப்பூரில் வைத்து ஏப்ரல் 16 அன்று மாலை 4.15 மணிக்கு நடைபெற உள்ளது.
இதை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு நடத்துகிறது. இதில் இந்த அமைப்பின் முன்னால் தேசிய தலைவர் E.M. அப்துல் ரஹ்மான் மற்றும் மாநில தலைவர் இஸ்மாயில், மாநில பொது செயலாளர் காலித் முஹமத், மாநில பொருளாளர் ரசீன், நெல்லை மாவட்ட தலைவர் முபாரக், மாநில செயல்குழு உறுப்பினர் அஹமது பக்ருதீன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
இலங்கை சார்ந்த முக்கிய பிரமுகர்கள்: இலங்கை தமிழர் தேசிய கூட்டமைப்பில் இருந்து கந்தையா சர்வேஸ்வரன் அவர்கள் கலந்து கொள்கிறார். மேலும் இலங்கை தேசிய ஐக்கிய முன்னணியில் இருந்து ஆசாத் சாலி அவர்கள் கலந்து கொள்கிறார். மேலும் தமிழ் நாட்டில் இருந்து மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தில் இருந்து பேராசிரியர் அ. மார்க்ஸ் கலந்து கொள்கிறார். மேலும் திராவிட விடுதலை கழகத்தின் பொது செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் கலந்து கொள்கின்றனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment