காந்திநகர்:பிரதமர் கனவில் மூழ்கியுள்ள குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி, மாநில அரசியல்வாதிகளின் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் லோக் ஆயுக்தாவை நியமிக்க மறுத்து வருகிறார். லோக் ஆயுக்தாவை நியமித்தால் வளர்ச்சி நாயகன் வேடம் போடு தனது உண்மை முகம் வெளிப்பட்டுவிடும் என்றுஅஞ்சியே லோக் ஆயுக்தா நீதிபதி நியமனத்தை மோடி புறக்கணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த ஆண்டு மாநில ஆளுநர் கமலா பெனிவால் கமலா பெனிவால் மாநில அரசை கலந்தாலோசிக்காமல் நீதிபதி ஆர்.மேத்தா என்பவரை லோக் ஆயுக்தவாக நியமித்தார். இதற்கு எதிராக மாநில அரசு உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் லோக் ஆயுக்தா நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தே இறுதியானது என உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக குஜராத் மோடி அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்த அதே வேளையில் சட்டப்பேரவையில் தன்னை காப்பாற்றிக்கொள்ளும் வகையில் புதிய மசோதாவை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முந்தைய லோக் ஆயுக்தா 1986-ஆம் ஆண்டு சட்டப்படி புதிய லோக் ஆயுக்தாக்களை தேர்வு செய்து நியமிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, மாநில ஆளுநர் வசம் இருந்தது.ஆனால், தற்போது மோடி அரசு தாக்கல் செய்துள்ள புதிய மோசடி மசோதாவின் படி தேர்வுக்குழுவின் பரிந்துரையின்படி ஒரு லோக் ஆயுக்தா மற்றும் 4 உதவி லோக்ஆயுக்தக்களை நியமிக்க வேண்டும். தேர்வுக் குழுவின் பரிந்துரையின்படி ஆளுநர் செயல்பட வேண்டும்.மேலும் புதிய மசோதாவின்படி எந்த அதிகாரிக்கும் லோக்ஆயுக்த விசாரணை வரம்பில் இருந்து விலக்கு அளிக்க மாநில அரசுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை தொடர்பாக எவராவது பத்திரிகையில் செய்தி வெளியிட்டாலோ அல்லது பொதுமக்களுக்கு தெரிவித்தாலோ 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.
-thoothu online.com
0 கருத்துரைகள்:
Post a Comment