அமெரிக்க கடற்படை தமது போர்க் கப்பல் ஒன்றை கொரியா கடல் பகுதிக்கு திடீரென அனுப்பி வைத்துள்ளது. இந்தக் கப்பலில் ஏவுகணை தடுப்பு கருவிகள் உள்ளன.
அமெரிக்கா கொரியா பகுதியில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை சீரியசாக எடுத்திருப்பதையே இது காட்டுகிறது.
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங்-உன், அமெரிக்க இலக்குகள் மீது ஏவுகணை ஏவப்படும் என்று எச்சரிக்கை விடுத்ததை முதலில் சீரியசாக எடுக்காத அமெரிக்கா, இப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கப்பலை அனுப்பி வைத்துள்ளது.
கொரியா கடலில், அமெரிக்க நட்பு நாடான தென் கொரிய கடல் எல்லை அருகே இந்தக் கப்பல் நங்கூரமிடப்பட்டுள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, அமெரிக்கா அனுப்பி வைத்திருப்பது USS McCain என்ற பெயருடைய destroyer ரகத்திலான கப்பல் என்று தெரியவருகிறது.
இந்தக் கப்பலில், ஏஜீஸ் ஏவுகணை எதிர்ப்பு சிஸ்டம் (Aegis missiles defense system) உள்ளது. வட கொரியா வைத்திருக்கும் ரகத்திலான ஏவுகணைகளை அடித்து கடலில் விழ வைக்கும் வல்லமை உள்ள சிஸ்டம் இது.
யு.எஸ்.எஸ்.மெக்கைன் கப்பல் கொரியா கடல் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட நடவடிக்கை, தற்போது அமெரிக்கா மற்றும் தென் கொரியா மேற்கொள்ளும் போர் ஒத்திகை பயிற்சியின் ஒரு பகுதி அல்ல. இந்தக் கப்பல், வட கொரிய அச்சுறுத்தலை தடுப்பதற்காகவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதால், நிலைமை அங்கு மோசமாகவே உள்ளது.
USS McCain நேற்று மதியம் கொரியா நேரப்படி (GMT+9) நேற்று(02.03.2013) காலை 10 மணிக்கு கொரியா கடலில் நங்கூரமிட்டுள்ளது.
இந்நிலையில் கொரியா பகுதியில் ஏற்பட்டுள்ள பதட்டம் காரணமாக, தமது எல்லைப் பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது சீனா.
வட கொரிய எல்லையில் அதிகளவு ராணுவ வீரர்களை குவித்துள்ள சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் (People’s Liberation Army – PLA), விமானப்படை போர் விமானங்களையும் அந்தப் பகுதியில் பறக்க விட்டுள்ளது. அத்துடன், தென் சீனக் கடல் பகுதியில் சீனக் கடற்படையின் போர் கப்பல்களின் நடமாட்டங்களும் அதிகரித்துள்ளன.
வட கொரியா, அமெரிக்க, தென்கொரிய இலக்குகள் மீது ஏவுகணை ஏவ தயாராக உள்ளது என அறிவிக்கப்பட்ட பின், சீனா எடுத்துள்ள ராணுவ நடவடிக்கை இது.
சீனாவும், வட கொரியாவும் நட்பு நாடுகள் என்ற போதிலும், சீனா இந்த ராணுவ முன்னேற்பாடுகளை செய்துள்ளது. ஒருவேளை, வட கொரியாமீது தாக்குதல் நடத்துவதாக கூறிக்கொண்டு, அருகில் உள்ள சீனா மீதும் சில ஏவுகணைகளை அமெரிக்கா ஏவலாம் என்று ஊகிக்கிறார்களோ, என்னவோ!
source: viruviruppu
0 கருத்துரைகள்:
Post a Comment