ரியாத்: சவூதி அரசின் வெளிநாட்டு பணியாளர்களுக்கு எதிரான புதிய சட்டத்தின் காலக் கெடுவை 2 மாதகாலம் நீட்டித்து உத்தரவு பிறப்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
"சவுதி அரேபியாவைச் சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து, 25 லட்சம் பேர் வேலையின்றி தவிப்பதால், அவர்களுக்கு வேலை வழங்குவதற்காக நிதாகத் சட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டு வந்திருக்கிறது. இதனால் அங்கு பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான தமிழக தொழிலாளர்களின் வேலைக்கு இந்த புதிய சட்டத்தின் மூலம் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
சவுதி அரசின் இந்த நடவடிக்கையால் மொத்தம் 20 லட்சம் பேர் வேலை இழப்பார்கள் என்றும், இதில் பெருமளவில் இந்தியர்கள் பாதிக்கப் படுவார்கள் என்றும் கூறப் படுகிறது.
இந்த சட்டம் அமுல்படுத்தப் பட்டு கடந்த சிலதினங்களாக, கெடுபிடி அதிகரித்து, தகுந்த உரிமம் இல்லாமல் பணிபுரியும் வெளிநாட்டு தொழிளாலர்கள் பலர் கைது செய்யப் படுவதோடு அவரவர்களின் நாட்டிற்கு அவர்கள் திருப்பி அனுப்பப் படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இந்த திடீர் நடவடிக்கைக்கு பலதரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இந்த நிதாகத் சட்ட நடவடிக்கைக்கு,வங்கிகள், காய்கறி அங்காடிகள்,நகைக்கடைகள்,இன்னும் சில நிறுவனங்களுக்கு மட்டும் மேலும் 2 மாதம் அதாவது (ஜூன் 9 ஆம் தேதிவரை) கெடு விதித்திருப்பதாக ஒரு சவூதி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதாவது குறிப்பிடப் பட்டுள்ள இரண்டு மாதத்திற்குள், ஏற்கனவே அறிவித்துள்ளபடி சவூதி நாட்டினரை வேலைக்கு அமர்த்துவதோடு, நிறுவனங்களுக்கு கொடுக்கப் பட்டுள்ள வரைமுறைபடி மட்டும் வெளிநாடு பணியாளர்கள் அமர்த்தப் பட வேண்டும். மீறினால் இதுவரை இல்லாத அளவுக்கு நிறுவனங்களும் வெளிநாட்டு பணியாளர்களும் தண்டனைக்கு உள்ளாக்கப் படுவர் என்று அதில் கூறப் பட்டுள்ளது.
ஆனால் ரியாத் கவர்னரும், ஜித்தா கவர்னரும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், குடியுரிமை அதிகாரிகளுக்கு இந்த காலநீட்டிப்பு குறித்த முறையான உத்தரவு வரவில்லை என்றும் கூறியுள்ளனர்.
-inneram
0 கருத்துரைகள்:
Post a Comment