Tuesday, March 5, 2013

சிறையில் இருந்தாலும் முழு சம்பளம் பெறும் புரோகித்


மும்பை : மாலேகான், சம்யுக்தா எக்ஸ்ப்ரஸ் உள்ளிட்ட பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள ராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த் பிரசாத் புரோகித் ராணுவத்தில் இருந்து இடைக்கால நீக்கம் செய்யப்படாததோடு முழுமையான சம்பளமும் வாங்குகிறார் என்ற தகவலும் கிடைக்கப் பெற்றுள்ளது.

 இந்தியாவில் நடைபெற்ற மாலேகான் குண்டு வெடிப்பு, சம்யுக்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வழக்குகளில் ஈடுபட்ட வலதுசாரி தீவிரவாதிகளுக்கு எல்லாவித உதவிகளும் செய்த ராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த பிரசாத் புரோகித் 2008ல் கைது செய்யப்பட்டார்.


புரோகித்துக்கு உதவி செய்ததாக கைது செய்யப்பட்ட மேஜர் ரமேஷ் உப்பாத்யாயா இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கோரியும் கிடைக்கவில்லை. பின் தகவல் ஆணைய உயரதிகாரிகளை தொடர்பு கொண்டதன் அடிப்படையில் புனே ராணுவம் கீழ்காணும் தகவலை அளித்துள்ளது.
புனே ராணுவம் அளித்துள்ள பதிலில் புரோகித் சிறைக்கு செல்வதற்கு முன்னால் வாங்கிய சம்பளம் மற்றும் இதர படிகளில் எவ்வித குறைவும் இல்லாமல் தற்போதும் வாங்குகிறார் என்றும் இது தொடர்பில் தங்களுக்கு எவ்வித கட்டளையும் வரவில்லை என்றும் கூறியுள்ளது

source: www.inneram.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza