எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைமை அலுவலக திறப்பு விழா இன்று(04-03-2013) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நாஞ்சில் செய்யதலி வரவேற்புரையாற்றினார். மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தலைமையேற்று அலுவலகத்தை திறந்து வைத்தார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் A.S. முஹம்மது இஸ்மாயில், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் செய்யது இபுராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில துணை தலைவர் ஷேக் அன்சாரி, மாநில செயலாளர் முஹம்மது ரசின், தி.மு.க பிரமுகர் G.M.தேவன், ஆ.தி.மு.க பிரமுகர் சோமு சேகர், இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர் தொண்டு ஹனிபா,மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் அ.ச.உமர் பாரூக், SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ரத்தினம் அண்ணாச்சி , நிஜாம் முஹைதீன், வடசென்னை மாவட்ட தலைவர் முகமது ரஷீத், மத்திய சென்னை மாவட்ட தலைவர் அமீர் ஹம்சா, தென்சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது சாலிஹ் மற்றும் தொகுதி நிர்வாகிகளும், செயல்வீரர்கள் ஏராளமானோரும், பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இறுதியில் மாநில பொருளாளர் அம்ஜத் பாஷா நன்றியுரையாற்றினார்.
SDPI கட்சியின் மாநில அலுவலகம் இதற்குமுன் இராயபுரத்தில் NO :104 ,M .S கோவில் தெருவில் இயங்கிவந்தது .இட பற்றாக்குறை காரணத்தை கொண்டு ப.எண்:4/பு .எண் :7,இப்ராஹீம் சாஹிப் தெரு,மண்னடி-1 என்ற முகவரியில் உள்ள கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment