தென் தாய்லாந்தில் நடைபெற்று வந்த கிளர்ச்சியில் புதிய திருப்பு முனையாக தாய்லாந்து அரசிற்கும், முஸ்லிம் கிளர்ச்சியாளர்களுக்கும் மத்தியில் அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பிரதமர் 'நஜிப்' முன்னிலையில் தாய்லாந்து அரசும், தென் தாய்லாந்து முஸ்லிம் கிளர்ச்சி படையும் கையெழுத்திட்டன.
பத்து வருடங்களுக்கு மேலாக நடந்து வரும் இந்த கிளர்ச்சியில் ஐந்தாயிரத்துக்கும் மேற்ப்பட்டவர்கள் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தாய்லாந்தின் சுற்றுலா துறையிலும், இரப்பர் உற்பத்தியிலும் தொய்வு ஏற்பட்டதை தொடர்ந்து தாய்லாந்து அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரப்பர் உறபத்தியில் தாய்லாந்து உலகில் முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவிற்கும், தாய்லாந்தின் தென் பகுதியிற்கும் இடையில் இருக்கும் பகுதி படானி. இங்கு மலாய் மொழியை தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் பண்டைய காலம் தொட்டு பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். சமீபகாலமாக தாய்லாந்து அரசு அங்கு புத்த மத கட்டுப்பாடுகளை அதிக அளவில் நடைமுறைப்படுத்த முயற்சி மேற்க்கொண்டதோடு மட்டுமல்லாமல் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை சிதைக்கும் விதமாக நடந்து கொள்ள தொடங்கியது முதல் அங்கு பிரச்சனை உருவாகத் தொடங்கியது.

முக்கியமாக பள்ளி பாட திட்டத்தில் அரசு மேற்க்கொண்ட மத கொள்கைகளை பரப்பும் முயற்சியை எதிர்த்து அங்கு முஸ்லிம் கிளர்ச்சிப் படை வலுவடையத் தொடங்கியது. பின்பு அரசின் அடக்குமுறை இராணுவத்தின் மூலம் வலுப்பெற, கலவரம் பெரிதாகியது. தற்போதுள்ள தாய்லாந்து அரசு முந்தைய அரசின் செயல்களில் இருந்து மாறி அமைதி பேச்சு வார்த்தைக்கு வழி வகுத்துள்ளது. முன்பே ஒன்றிரண்டு முறை இராணுவம் மூலம் நடந்த இரகசிய பேச்சு வார்த்தையும் தோல்வியை சந்திக்கவே, தாய்லாந்து அரசு மலேசியாவின் உதவியுடன் தற்போது அமைதி பேச்சு வார்த்தைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
source: www.inneram.com

0 கருத்துரைகள்:
Post a Comment