தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் பள்ளிவாசல்கள், தர்காக்கள் போன்ற வக்பு நிறுவனங்களின் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு தமிழக அரசு வக்பு நிறுவன மேம்பாட்டு நிதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
மேலும் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நிதி தேவையுள்ள வக்பு நிறுவனங்கள் உரிய திட்ட மதிப்பீடு, வரைபடம், புகைப்படம் போன்ற விவரங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு வக்பு வாரியம், எண்.1. ஜாபர் சிராங் தெரு, வள்ளல் சீதக்காதி நகர்,
சென்னை – 600 001. என்ற முகவரிக்கு விண்பிக்க வேண்டும்
0 கருத்துரைகள்:
Post a Comment