Saturday, March 9, 2013

இஜாஸ் அஹ்மத் மிர்ஸாவை மீண்டும் டி.ஆர்.டி.ஓவில் சேர்க்கவேண்டும் – கட்ஜு கோரிக்கை!

இஜாஸ் அஹ்மத்
புதுடெல்லி:தீவிரவாத வழக்குகளின் பெயரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின்(டி.ஆர்.டி.ஓ) விஞ்ஞானி இஜாஸ் அஹ்மத் மிர்ஸாவை பணியில் மீண்டும் சேர்க்கவேண்டும் என்று ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் சேர்மனும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு வலியுறுத்தியுள்ளார்.
தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) மிர்ஸா மீது குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்காத சூழலில் மிர்ஸாவுக்கு உரிய இழப்பீட்டை வழங்கி பணியில் மீண்டும் சேர்த்துக்கொள்ளவேண்டும். மேலும் மத்திய, மாநில அரசுகள் பகிரங்கமாக மன்னிப்புக்கோர வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, கர்நாடகா முதல்வர் ஜகதீஷ் ஷெட்டார் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில் கட்ஜு கோரிக்கை விடுத்துள்ளார்.

மிர்ஸா மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரமில்லை என்பது உண்மையானால் அவரை உடனடியாக பணியில் சேர்க்கவேண்டும். இல்லையெனில் முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்ற செய்தியை அளிக்கிறோம் என்பது பொருள் என்று கட்ஜு கூறுகிறார்.
குண்டுவெடிப்பு வழக்குகளில் முஸ்லிம்களை தவறாக உட்படுத்துவதாக விமர்சித்து ஏற்கனவே செய்திக் குறிப்பை கட்ஜு வெளியிட்டிருந்தார். சிறையில் கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளானதாக மிர்ஸா தொலைக்காட்சி பேட்டியொன்றில் கூறியிருந்தார்.
-thoothu online.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza