Saturday, March 2, 2013

வி.களத்தூர் மக்கள் போராட்டம் : திருச்சியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி



திருச்சி : பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் மற்றும் மாநில நிர்வாகிகள் 28.02.2013 அன்று பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் பகுதிக்கு சென்று அங்குள்ள ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் மக்களை சந்தித்து பேசினார்கள்  . பின்னர் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் திருச்சியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூறியதாவது :

" கடந்த 22.01.2013 அன்று பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் இரண்டு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் ஒரு தரப்பினரான முஸ்லிம்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் மீது பொய்வழக்கு போடப்பட்டு மாணவர்கள் உட்பட 72 நபர்கள் அநியாயமாக கைது செய்யப்பட்டார்கள். இன்னொரு தரப்பினர் வன்முறையில் ஈடுபட்டு வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர் அவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. ஒருதலைபட்சமாக முஸ்லிம்கள் மீது மட்டும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. ராஜாசேகர் நடந்துள்ளார். இந்நிலையில் பதட்டம் நீடித்துக்கொண்டிருந்த சூழ்நிலையில் கடந்த 25.02.13 அன்று அதே பகுதியில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.


நீண்ட காலமாக நடந்து வரும் பிரச்சனையை மாவட்ட நிர்வாகம் சட்டப்பூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் கையாலாமல் அமைதிக்கூட்டத்தை அடையாளத்திற்காகவும், பொய்வழக்குகளிட்டு, சோதனைச்சாவடி அமைத்து அடக்குமுறையை ஏற்படுத்தி இரு தரப்பினரக்கு இடையே மீண்டும் விரிசலை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

ஆகவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் ஒருதலைபட்சமான நடவடிக்கையை கண்டித்தும், தங்களின் நியாயமான கோரிக்கையை செவிமடுக்காது நாங்களும் குடிமக்களா ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து வி.களத்தூர் மக்கள்  கடந்த 25.02.13 அன்று ரேசன் கார்டு ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்தியுள்ளனர் .

எனவே, தமிழக அரசு


  • நேரடியாக தலையிட்டு இருசமூகத்தினருக்கு மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்துவதோடு, முஸ்லிம் விரோத போக்குடன் நடக்கும் மாவட்ட ஆட்சியாளர் மற்றும் RDO ரேவதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • முஸ்லிம்கள் மீது பொய் வழக்கிட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு ராஜசேகரன் மீது நடவடிக்கை எடுத்து அப்பாவி முஸ்லிம்கள் மீது போடப்பட்ட பொய்வழக்கை வாபஸ் பெற வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற மார்ச் 7 அன்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது " என்றார் . இச்சந்திப்பின் போது மாநில செயலாளர் எஸ்.இல்யாஸ் , முகம்மது ரசீன் ,  திருச்சி மாவட்ட தலைவர் அமீர் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் உடனிருந்தனர் .

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza