பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் பல வருடங்களாக இந்து அமைப்பினர் அடிக்கடி கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் ஊர்வலம் என்ற பெயரில் முஸ்லிம்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதிகளில் சென்று தொழுகை நேரத்தின் போது பள்ளிவாசலின் முன்பு கொட்டு அடித்தும்,விரும்பத்தகாத கோஷங்கள் எழுப்பியும் தொழுகைக்கு இடையுறு ஏற்படுத்துவதால் அப்பகுதியில் வாழும் முஸ்லிம்களுக்கும் இந்து அமைப்பினருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஜனவரி 24 அன்று கல்யாண ஊர்வலம் என்ற பெயரில் ஊர்வலமாக வந்து மகரிப் தொழுகைக்கு இடையூறு ஏற்படுத்தி முஸ்லிம்களை கடுமையாக தாக்கினர். இதில் தொழுகைக்கு வந்த 6 க்கும் மேற்பட்ட நபர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக பாப்புலர் ஃப்ரண்ட் சட்ட ரீதியாக உதவியும், ஜனநாயகரீதியில் ஆர்ப்பாட்டமும் செய்தது. 1200 க்கும் மேற்பட்ட பாப்புலர் ஃப்ரண்டின் தொண்டர்கள் மற்றும் ஜமாத்தார்கள் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் அப்பாவிகளை விடுதலை செய்யக்கோரியும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்து கைதாகி சிறிது நேரத்தில் விடுதலை ஆகினர்.
இந்நிலையில் பதட்டம் நீடித்துக்கொண்டிருந்த சூழ்நிலையில் கடந்த 25.02.13 அன்று அதே பகுதியில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
எனவே இதனை கண்டித்து பெரம்பலூர் வி.களத்தூர் பகுதி மக்கள் கடந்த 25.02.13 அன்று ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் திருப்பி ஒப்படைக்கும் போராட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியர் ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை வாங்க மறுத்துவிட்டார். மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை உறுதியான எந்த நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் தொடரும் என்று ஊர்மக்கள் முடிவு எடுத்துள்ளனர்.
இந்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் மற்றும் மாநில நிர்வாகிகள் 28.02.2013 அன்று வி.களத்தூருக்கு நேரில் சென்று ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் மக்களை சந்தித்து நிலைமையை கேட்டறிந்து கொண்டார்கள் .
0 கருத்துரைகள்:
Post a Comment