காஞ்சிபுரம் : பாஸ்போர்ட் இல்லாத முஸ்லிம்கள், உடனடியாக பாஸ்போர்ட் பெறுவதற்கு வசதியாக “ஹஜ் மேளா”வை அரசு நடத்துகிறது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் மார்ச் 2ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஹஜ் மேளா நடைபெற உள்ளது. இதில் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் பங்கேற்று, உடனடியாக பாஸ்போர்ட் கிடைக்க ஆவண செய்கிறார்கள்.
இதனை முன்னிட்டு ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, புனித ஹஜ் பயண மேற்கொள்பவர்களுக்கு உதவி செய்வதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகத்தில் பிப்ரவரி 26, 27ம் தேதிகளில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கான பாஸ்போர்ட் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது .
0 கருத்துரைகள்:
Post a Comment