
கெய்ரோ: ஈரான் அதிபர் அஹ்மதி நிஜாத் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக எகிப்து நாட்டுக்கு சென்றுள்ளார். கடந்த முப்பது வருடங்களில் ஈரான் நாட்டைச் சேர்ந்த தலைவர் ஒருவர் எகிப்து செல்வது இதுவே முதன்முறையாகும்.
எகிப்து சென்றுள்ள அஹ்மதி நிஜாத்துக்கு எகிப்து அதிபர் முர்சி சிறப்பான வரவேற்பு அளித்தார். இந்நிலையில் கெய்ரோவில் உள்ள மசூதிக்குச் சென்ற அஹ்மதி நிஜாத் மீது சிரிய நாட்டு ஆதரவாளர் ஒருவர் ஷூவை தூக்கி எறிந்தார். அஹ்மதி நிஜாத் மீது ஷூ படாமல் அவரது பாதுகாவலர்கள் தடுத்தனர்.
அஹ்மதி நிஜாத் மீது ஷூ வீசப் பட்டது காரணமாக 4 பேரை காவல்துறை கைது செய்து விசாரித்து வருகிறது. கெய்ரோவில் நேற்று தொடங்கிய இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்க வந்த அஹ்மதி நிஜாத் மீது ஷூ வீசப் பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source: inneram.com

0 கருத்துரைகள்:
Post a Comment