
கெய்ரோ: ஈரான் மீது தாக்குதல் நடத்தப் படுமானால் அடுத்த நிமிடமே இஸ்ரேல் ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும் என்று ஈரான் அதிபர் மஹ்துத் நிஜாத் எச்சரித்துள்ளார்.
எகிப்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஈரான் அதிபர், கெய்ரோவில் நடைபெற்று வருகிற இஸ்லாமிய கூட்டுறவு நாடுகளின் மாநாட்டில் பங்கேற்றுள்ளார். அப்போது எகிப்திய தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தபோது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, "ஈரான் விவகாரங்களில் இஸ்ரேல் தலையிடுவதோ, தாக்குதல் நடத்துவதோ, அவ்வளவு இலகுவனதல்ல, அப்படி தாக்குதல் நடத்தினால் ஈரானின் பதிலடி எப்படி இருக்கும் என்று இஸ்ரேலுக்குத் தெரியும், இதுகுறித்து அந்த நாடு அச்சத்தில் உள்ளது." என்று மஹ்துத் நிஜாத் தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment