புதுடெல்லி:மனித உரிமைச் சட்டங்களுக்கு எதிரான மரணத் தண்டனையை வாபஸ் பெறவேண்டும் என்று மனித உரிமை அமைப்பான என்.சி.ஹெச்.ஆர்.ஓ கோரிக்கை விடுத்துள்ளது. அப்ஸல் குருவுக்கு சொந்தமாக வழக்கறிஞரை நியமிக்க கூட வாய்ப்பு அளிக்கவில்லை என்று அவ்வமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இதுக்குறித்து என்.சி.ஹெச்.ஆர்.ஓ வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்:
“அப்சல் குருவிற்கு போராளி இயக்கங்களுடன் தொடர்பு என்பதற்கு ஆதாரங்கள் இல்லை என்ற போதிலும் சமூகத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்த மரணத்தண்டனை விதிப்பதாக உச்சநீதிமன்றம் கூறியது. கருணை மனுவை குடியரசு தலைவர் தள்ளபடிச் செய்ததை குடும்பத்தினருக்கு தெரிவித்திருக்கவேண்டும். அந்த உரிமை கூட மறுக்கப்பட்டது என்பது அப்சல் குருவின் குடும்பத்தினர் அளித்துள்ள பேட்டியில் இருந்து தெரியவருகிறது.
இவ்வழக்கில் விசாரணை அதிகாரிகள் ஆவணங்களை ஜோடித்ததாக குற்றச் சாட்டு எழுந்துள்ள சூழலில் இதுக் குறித்து விசாரணை நடத்தவேண்டும்.டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய பஜ்ரங்தளத்தினர் தாக்கியது கண்டிக்கத்தக்கது. வன்முறையாளர்களை அரசு கைது செய்யவேண்டும்.” என தெரிவித்துள்ளது
0 கருத்துரைகள்:
Post a Comment