அகமதாபாத் : 19 வயது கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் 2004ஆம் ஆண்டு போலியாக என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக குஜராத் மாநில காவல் துறையைச் சேர்ந்த மேலும் ஒரு அதரிகாரியை சிபிஐ கைது செய்துள்ளது.
காந்தி நகர் சிறப்புச் செயல்பாட்டுக் குழு காவல் ஆய்வாளரான பாரத் பட்டேல் என்பவரை சிபிஐ சனிக்கிழமை பின்னிரவில் கைது செய்து ஞாயிற்றுக் கிழமையன்று நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தியது. மாவட்ட காவல்துணைக் கண்காணிப்பாளர் தருண் பரோட்டும் சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்டார். 2004ஆம் ஆண்டு அகமதாபாத் குற்றப் பிரிவு காவல்துறையில் உதவி ஆய்வாளராக பட்டேல் பணியாற்றியவர்.
இவரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் 14 நாள்கள் தங்கள் பாதுகாப்பில் அனுப்புமாறு சிபிஐ விசாரணை அதிகாரி ஜி. கலைமணி கேட்டுக் கொண்டார். ஆனால் 24 மணி நேரத்திற்கு மட்டும் மாஜிஸ்ட்ரேட் நீதிபதி அனுமதி வழங்கினார்.
source: inneram
0 கருத்துரைகள்:
Post a Comment