Monday, February 25, 2013

“எதிரி நாட்டு உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்” ஈரான் அறிவிப்பு!


ஈரானிய ராணுவம் ‘எதிரி நாட்டு’ உளவு விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரானிய அரசு நியூஸ் ஏஜென்சி IRNA (Islamic Republic News Agency) அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

ஈரானிய ராணுவத்தை சேர்ந்த ஜெனரல் ஹமீத் சர்க்ஹெலி, “தென்கிழக்கு ஈரானின் கெர்மான் பகுதியில் எதிரி ராணுவத்தின் உளவு விமானத்தை வீழ்த்தினோம். இதற்கு முன்னரும் இதே போல உளவு விமானங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன” என்று கூறியதாக செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், எந்த நாட்டு உளவு விமானம் என்பதை ஈரானிய அரசு நியூஸ் ஏஜென்சி தெரிவிக்கவில்லை.


வாஷிங்டனில் பென்டகன் செய்தித் தொடர்பாளர், “நாமும் இந்த ரிப்போர்ட்டை பார்த்தோம். ஆனால், அவர்கள் (ஈரான்) அமெரிக்க உளவு விமானம் என்று குறிப்பிடவில்லை” என்றார்.

கடந்த மாதம் ஈரான், அமெரிக்க உளவு விமானம் RQ11 ஒன்றை வீழ்த்தியதாக அறிவித்திருந்தது. அதற்கு முன் 2011-ம் ஆண்டு ஆகஸ்ட்டிலும், 2012-ம் ஆண்டு நவம்பரிலும் அமெரிக்க உளவு விமானங்களை தமது வான் பகுதியில் வைத்து சுட்டு வீழ்த்தியதாக கூறியிருந்தது.

இப்போதுதான் முதல் தடவையாக, எந்த நாட்டு உளவு விமானம் என்று கூறாமல், ‘எதிரி நாட்டு விமானம்’ என பொதுப்படையாக கூறியுள்ளது.ஒருவேளை இஸ்ரேலிய விமானமாக இருக்குமோ!

source: viruviruppu

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza