புதுடெல்லி:தகவல் அறியும் உரிமை ஆர்வலர் ஷஹ்லா மஸூதின் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ, மத்தியபிரதேச மாநில பா.ஜ.க மூத்த எம்.எல்.ஏ த்ரூவ் நாராயண் சிங்கிடம் விசாரணை நடத்த உள்ளது. ஷஹ்லா மஸூதை கொலைச் செய்ய இவர் சதி ஆலோசனையில் ஈடுபட்டார் என்பது குற்றச்சாட்டு. இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஷஹீதா பர்வேசுடன், பா.ஜ.க எம்.எல்.ஏவின் தொடர்பு குறித்தும் விசாரணை நடத்தப்படும்.
ஷாஹிதா பர்வேஸின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சி.டியின் உண்மை நிலைய ஆராய செண்ட்ரல் ஃபாரன்சிக் சயன்ஸ் லேபரேட்டரின் அறிக்கைக்காக சி.பி.ஐ காத்திருக்கிறது. இவ்வறிக்கை இன்று கிடைக்கும் என கருதப்படுகிறது.
த்ரூவ் நாராயணனுக்கு ஷாஹிதா பர்வேசுடனான தொடர்பு குறித்து சில முக்கிய ஆதாரங்கள் சி.டியில் இருப்பதாக சி.பி.ஐ கூறுகிறது.இதன் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தப்படும்.ஷஹ்லா மஸூத் கொலையில் த்ரூவ் நாராயணனுக்கு பங்கில்லை என்று சி.பி.ஐ கூறியது. ஆனால், புதிய ஆதாரங்கள் வெளியான சூழலில் அவரை விசாரணை செய்ய வேண்டியுள்ளது என்று சி.பி.ஐ தற்போது கூறுகிறது.
ஷஹ்லா மஸூத் கொலையில் த்ரூவ் நாராயணன் மீதான அனைத்து சந்தேகங்களையும் தீர்க்க சி.பி.ஐ முயலுகிறது.
2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதி அன்னா ஹஸாரேயின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க செல்லவிருந்த ஷஹ்லா மஸுத் தனது வீட்டின் முன்னால் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் கடந்த ஆண்டும் மே மாதம் சி.பி.ஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது. அதன் பிறகு சில ஆதாரங்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷாஹிதா பர்வேஸையும், அவரது தோழி ஸபா ஃபாரூக்கையில் சி.பி.ஐ விசாரித்தது.
பர்வேஸ் உள்ளிட்டவர்களுடனான தொடர்பு குறித்து த்ரூவ் நாரயாணனிடம் விசாரணை நடத்தவேண்டியது முக்கியமாகும் என்று சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வழக்கு தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனை நடத்த த்ரூவ் நாராயணன் சிங்கினை செண்ட்ரல் ஃபாரன்சிக் லாபரேட்டரி சயன்சில் ஆஜராக சி.பி.ஐ அழைத்தது. ஆனால், உடல்நிலை காரணங்களை காட்டி த்ரூவ் நாராயணன் ஆஜராகாமல் நழுவினார்.
source: thoothu online.com
0 கருத்துரைகள்:
Post a Comment