அலகாபாத்தில் கும்ப மேளாவில் பங்கு கொண்டுள்ள விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் பிரவீன் தொகாடியா, ''ஹிந்துத்துவாக்காக எதையும் செய்யத் தயார். சிறைக்குச் செல்லவும் தயார். நாட்டின் நலன் கருதி பேசுவது குற்றமாகாது. மகாராஷ்டிரா அரசுக்கு தைரியம் இருந்தால் என்னைக் கைது செய்துப் பார்க்கட்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி மகாராஷ்டிராவில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரவீன் தொகாடியா மத துவேசக் கருத்துக்களைத் தெரிவித்ததாகவும் அதன் பேரில் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் மகாராஷ்டிரா அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.
வழக்குப் பதிவு செய்துள்ள மகாராஷ்டிரா காவல்துறை பிரவீன் தொகாடியாவை கைது செய்ய சட்ட ஆலோசனைகளைக் கேட்டு வருகிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment