Monday, February 11, 2013

அஃப்சல் குருவை தூக்கிலிட்டதை கண்டித்து இன்று நடைபெறும் அனைத்து கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் SDPI பங்கேற்பு

அஃப்சல் குருவை தூக்கிலிட்டதை கண்டித்து ,நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது பங்கேற்பு.
“பெரும் (உயிர்)இழப்புகளுக்குக் காரணமான இச்சம்பவம் தேசம் முழுவதையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. குற்றவாளிக்கு மரணதண்டனை அழிப்பதன் மூலமே சமூகத்தின் கூட்டுமனசாட்சியைத் திருப்திப்படுத்த முடியும்” என்கிறது உச்ச நீதி மன்றத் தீர்ப்பின் மொழிபெயர்ப்பு.
நமது இந்திய தண்டனைச் சட்டத்தில், இப்படிக் காரணம் சொல்லி ஒருவரைத் தூக்கில் போடலாம் என்று எங்கேயும் சொல்லிடவில்லை என்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.ஆனால் இந்திய தண்டனை சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு அஃப்சல்குரு ரகசியமாக தூக்கிலடப்பட்டார்.அவரது குடும்பத்தினருக்கு கூட முறைப்படி  தெரியப்படுத்தப்பட வில்லை.

இது ஆபத்தான முடிவு.நமது அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கும் செயல்.அஃப்சல் குருவை தூக்கிலிட்டது வன்மையாக கண்டிக்கதக்கது.
எனவே அஃப்சல் குருவை தூக்கிலிட்டதை கண்டித்தும்,இனி வரும் காலங்களில் இது போன்ற தவறான முடிவு நடைபெறக்கூடாது என்பதனை வலியுருத்தியும்,அனைத்து கட்சிகளின் சார்பாக நாளை திங்கள்கிழமை 11-02-2013 மாலை 4மணிக்கு சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் கலந்து கொள்கிறார்.
சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும்,மனித உரிமையை பாதுகாக்கவும்,மனித உரிமைக்காக போராடும் அனைத்து நல்லுள்ளங்களும்,ஊடக,பத்திரிக்கை நண்பர்களும்,சமூக ஆர்வலர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza