Tuesday, February 26, 2013

புதுவலசையில் தீ விபத்து


புதுவலசையில்  இன்று(26/02/2013) செவ்வாய் கிழமை மதியம் சுமார் 2 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்றில் குடிசை ஒன்று முற்றிலும் எரிந்து சாம்பலானது. புதுவலசை மேற்கு தெருவில் வசித்து வரும் இப்ராஹிம் என்பவருக்கு சொந்தமான குடிசை வீடு தற்செயலாக தீப்பிடித்ததில் அவருடைய குடிசையில்  இருந்த துணிகள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் முற்றிலும் தீயில் கருகி விட்டது.


மேலும். அந்த குடிசையின் அருகில் இருந்த மின் கம்பமும், மேலே சென்ற மின் வயர்களும் சேதமடைந்தன.

பொருளாதாரத்தில்  பின் தங்கிருக்கும் சகோ.இப்ராஹிம் அவர்களுக்கு தங்களால் முடிந்த அளவு உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.



0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza