Monday, February 4, 2013

நல்ல குடும்பத்துப் பெண்கள் நடனமங்கைகள் ஆக மாட்டார்கள் : ஹூரியத் அமைப்பு

நல்ல குடும்பத்துப் பெண்கள் நடனமங்கைகள் ஆக மாட்டார்கள் : ஹூர்ரியத் அமைப்பு
காஷ்மீர்: நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் நடனமாடுவதற்கு அக்குடும்பத்தார் சம்மதிக்க மாட்டார்கள் என்று காஷ்மீர் ஹூர்ரியத் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அயாஸ் அக்பர் கூறியுள்ளார்.

முழுவதும் பெண்களே உள்ள நடனக்குழு ஒன்று காஷ்மீரில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அக்குழுவினருக்கு மிரட்டல்களும் கடும் எதிர்ப்புகளும் வந்ததாகச் சொல்லப்பட்டதையடுத்து, காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் அந்த நடனக் குழுவிற்கு தனது அரசின் ஆதரவைத் தெரிவித்திருந்தார்.


இது பற்றி கருத்தளித்த ஹூர்ரியத் அமைப்பின் செய்தித் தொடர்பாளர்  அக்பர் , "நடனக்குழுவிற்கு வந்த மிரட்டல்கள் கூடாது; அவை நல்லதல்ல.  ஆனால், நல்ல குடும்பத்தவர்கள் அன்னியரின் இன்பத்திற்கு நடனமாடுபவர்களாக தம் பெண்கள் ஆவதை ஏற்க மாட்டார்கள். பெற்றோர் அறிவுரைகள் மூலமே இதைச் சரி செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

"காஷ்மீர் என்பது இஸ்லாமிய புனிதர்கள் வாழ்ந்த இடம் என்பதை உமர் அப்துல்லாஹ் வரலாற்றைப் பார்த்து தெரிந்து கொள்ளட்டும்" என்றார் அக்பர். "அவருடைய குடும்பம் இஸ்லாமிய போதனைகளிலிருந்து விலகிக் கொண்டிருப்பதையே நடனக் குழுவிற்கு ஆதரவளித்த செயல் காட்டுகிறது" என்று கூறினார்.

source: inneram

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza