ஹைதராபாத்தில் நேற்று முன் தினம் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் சிக்கி காயமடைந்த ஒருவர், 2007-ம் ஆண்டு குண்டு வெடிப்பில் சிக்கி கால் இழந்தவர் என்ற விபரம் வெளியானதை அடுத்து, அவர் குண்டு வெடிப்பில் தொடர்புடையவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தை மீடியாக்கள் வெளியிட்டு வருகின்றன.
“அந்த நபர்மீது எமக்கு சந்தேகம் இல்லை” என்று கூறியிருக்கிறது ஹைதராபாத் போலீஸ்.
அப்துல் வாசேய் மிஸ்ரா (மேலே போட்டோவில் உள்ளவர்) என்ற பெயருடைய 23 வயதான வேலையற்ற இந்த இளைஞன், மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் சிக்கி படுகாயமடைந்தவர். அவரது போதாத காலம், 5 ஆண்டுகளின்பின் ஹைதராபாத்தில் குண்டு வெடித்த நேரத்தில், குண்டுவெடித்த இடத்தில் நின்று, படுகாயமடைந்துள்ளார்.
தற்போது, மலக்பேட்டில் உள்ள யஷ்கோடா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகிறார்.
இவர் சந்தேக நபராக இருக்கலாம் என மீடியாக்கள் பிளாஷ் நியூஸ் போட்டது தொடர்பாக கருத்து கூறியுள்ள ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் அனுரக் சர்மா, “அவரை சந்தேக நபராக நாம் பார்க்கவில்லை. சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த மற்றையவர்களிடம் வாக்குமூலம் பெறுவது போலவே, இவரிடமும் வாக்குமூலம் பெற்றிருக்கிறோம். அவ்வளவுதான்.
இவரிடம் எடுக்கப்பட்டது ‘சாட்சி வாக்குமூலம்’ மட்டுமே. அவரை போலீஸ் ‘கிரில்’ பண்ணுகிறது என வெளியான தகவல்கள் உண்மை கிடையாது. அவருக்கும் இந்த குண்டுவெடிப்புக்கும் தொடர்பு கிடையாது என போலீஸ் நம்புகிறது” என்று சற்றுமுன் பி.டி.ஐ. செய்தி ஏஜென்சிக்கு தெரிவித்தார்.
source:viruviruppu
0 கருத்துரைகள்:
Post a Comment