ஹைதராபாத் நகரில் நேற்றைய தினம் (21.02.2013) நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 15 அப்பாவிகள் பலியாகினர். 83 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இக்குண்டுவெடிப்பிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது .இது குறித்து அதன் மாநில தலைவர் A.S.இஸ்மாயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இறந்த பதினைந்து அப்பாவிகளின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் , காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் . இதைப் போன்ற தாக்குதல்கள் மக்களிடையே அமைதியின்மையையும் ,நல்லிணக்கத்தையும் குலைக்கின்றன. இத்தருணத்தில் எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட்டு தீய சக்திகளின் சதிகளை முறியடிக்க வேண்டும் .
உண்மையான குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் , விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்னரே குற்றவாளிகளை யூகிக்கும் போக்கை ஊடகங்கள் கைவிட வேண்டும் , அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் , தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக் கொள்கிறது .
0 கருத்துரைகள்:
Post a Comment