Friday, February 22, 2013

திரைத்துறை - ஒரு சமூகப் பார்வை" சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கருத்தரங்கம்


 தமிழ் திரைப்படத் துறையில் முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாத்திற்கு எதிரான அவதூறு பிரச்சாரங்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. அண்மையில் வெளியான கமலஹாசனின் விஸ்வரூபம் உலக மக்களுக்கு நல்லுபதேசமான இறை வேதம் திருக்குர்ஆன் மற்றும் முஸ்லிம்களின் வழிப்பாட்டு முறைகள் தீவிரவாதத்தை தூண்டுவதாக சித்தரித்தது. 
இதற்கு எதிராக முஸ்லிம் சமூகம் வெகுண்டெழுந்தது. இந்நிலையில் திரைப்படத் துறையினருக்கு சமூகம் குறித்த பார்வை தேவை என்பதை வலியுறுத்தும் வகையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் "திரைத்துறை - ஒரு சமூகப் பார்வை" கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் உள்ள ஹோட்டல் பாண்டியனில் வைத்து பிப்ரவரி 20 அன்று மாலை 6:45 மணியளவில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் தலைமையில் நடைப்பெற்றது.
 மாநிலத் துணைத்தலைவர் எம். சேக் முஹம்மது அன்சாரி வரவேற்புரை நிகழ்த்தினார்.இக்கருத்தரங்கில் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்க செயலாளர் நடிகர் ராதாரவி, நாம் தமிழர் கட்சியின் மாநில தலைவர் இயக்குனர் சீமான் , திரைப்பட இயக்குனர்கள் சங்க செயலாளர் இயக்குனர் அமீர் , எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.அஹமது ஃபக்ருதீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சினிமா துறை எவ்வாறு செயல்ப்பட வேண்டும்  என்பதை குறித்து  சிறப்புரை ஆற்றினார்கள்.
முடிவில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுச்செயலாளர் ஏ.காலித் முஹம்மது நன்றி கூறினார். சமூக ஆர்வலர்கள், ஆண்கள் , பெண்கள் உட்பட திரளான மக்கள் கலந்து கொண்டனர்.




பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் தலைமையுரையாற்றிய போது
மாநிலத் துணைத்தலைவர் எம். சேக் முஹம்மது அன்சாரி வரவேற்புரையாற்றிய போது
தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்க செயலாளர் நடிகர் ராதாரவி உரையாற்றிய போது
திரைப்பட இயக்குனர்கள் சங்க செயலாளர் இயக்குனர் அமீர் உரையாற்றிய போது
நாம் தமிழர் கட்சியின் மாநில தலைவர் இயக்குனர் சீமான் உரையாற்றிய போது

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி உரையாற்றிய போது

பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.அஹமது ஃபக்ருதீன் உரையாற்றிய போது

பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுச்செயலாளர் ஏ.காலித் முஹம்மது நன்றியுரையாற்றிய போது

கூட்டத்தின் ஒரு பகுதி

கூட்டத்தின் ஒரு பகுதி

Add caption

அரங்கத்திற்கு வெளியே மக்கள் கூட்டம்

நினைவுப் பரிசுகள் வழங்கிய போது

நினைவுப் பரிசுகள் வழங்கிய போது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza