"அப்சல் குருவின் தூக்கிலிடுவது குறித்து எங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை" என்று அப்சல் குரு குடும்பத்தினர் கண்ணீருடன் கூறியுள்ளனர்.
பாராளுமன்ற தாக்குதல் தொடர்பாக குற்றம் சாட்டப் பட்டு தூக்குத் தண்டனை நிறைவேற்றப் பட்ட அப்சல் குருவின் உடல் டெல்லி திகார் சிறையிலேயே அடக்கம் செய்யப் பட்டது.
இந்த நிலையில் "அப்சல் குருவின் உடலை நாங்கள் நல்லடக்கம் செய்யவே விரும்பினோம். அவர் தூக்கிலிடப்பட்ட விஷயத்தை தொலைக்காட்சி செய்தி மூலமாகவே அறிந்து கொண்டோம். ஆனால் எங்கள் பகுதியில் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததால் உடனடியாக எங்களால் வெளியே வர முடியவில்லை. ஆனால், உள்ளூர் காவல்நிலையத்தில் எங்களுக்கு உதவுமாறு கோரினோம். அதுவும் மறுக்கப் பட்டது" என்று அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
இதனிடையே அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப் பட்டதற்கு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர்களில் ஒருவரான பேரறிவாளன் தாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " காந்தி பிறந்த மண்ணில் மரண தண்டனை ஒழிக்கப் பட வேண்டும், புத்திகெட்டவர்கள் செய்யும் செயலுக்கு மரண தண்டனை தீர்வாகாது." என்று கூறியுள்ளார்.
மேலும் "நாடாளுமன்ற தாக்குதல் மிகப் பெறிய குற்றம் என்பதை மறுப்பதற்கில்லை, அதற்கு மரண தண்டனைதான் தீர்வு என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது, இதனால் மேலும் வன்முறைக்கு வழிவகுக்கும்" என்று அவர் கூறியுள்ளார்.
"அப்சல் குருவுக்கு மரணத்தண்டனை நிறைவேற்றப் பட்டதால், காஷ்மீரில் இப்பொழுது பிரச்னை வெடிக்கும் என்று அரசே, 144 தடை உத்தரவு பிறப்பித்து காவல்துறை குவிக்கப்பட்டுள்ளனர். இந்த தண்டனையால் அவரது குடும்பம் அனாதையாக்கப் பட்டு வாழ்வை இழந்துள்ளது. யாரோ செய்த தவறுக்கு அவரது குடும்பத்தையும் ஏன் தண்டிக்க வேண்டும்?" என்று பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் கூறியுள்ளார்.

suorce: inneram.com

0 கருத்துரைகள்:
Post a Comment