
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி இது குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
2001 டிசம்பர் 13 ம் நாள் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அஃப்சல் குருவிற்கு இன்று காலை மத்திய அரசு தூக்குதண்டனை நிறைவேற்றியுள்ளது.
அவசத்தனமாக நிறைவேற்றப்பட்டுள்ள இந்த தண்டனை பாரதிய ஜனதாவின் நிர்பந்தத்திற்காவும், அடுத்த நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டும் எடுக்கப்பட நடவடிக்கையாகவுமே தோன்றுகிறது. காவி தீவிரவாத குற்றச்சாட்டை முன்வைத்த உள்துறை அமைச்சரை குறிவைக்கும் பாரதிய ஜனதாவை இதன் மூலம் எதிர்க்கொள்ள முடியும் என காங்கிரஸ் நினைப்பதாக தோன்றுகிறது.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட என்பதில் மாற்று கருத்து இல்லை. அதனால்தான் கசாபின் தூக்கு தண்டனையை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் அப்பாவிகள் தண்டிக்கப்பட கூடாது என்பது மிக முக்கியமானதாகும்.
இந்த வழக்கில் அஃப்சல் குரு நேரடியாக தாக்குதலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு இல்லை. மேலும் எந்த ஒரு பயங்கரவாத இயக்கத்தையும் சார்ந்தவர் என்றும் நிரூபிக்கப்படவில்லை . குற்றவாளிகளுக்கு உதவினார் என்பதற்கு கூட நேரடி சாட்சியங்கள் இல்லை என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்றாலும் சமுகத்தின் கூட்டு மனசாட்சியை சமாதானப்படுத்த இத்தண்டனை விதித்ததாக நீதிபதி அப்போது குறிப்பிட்டார்.
எனவேதான் அஃப்சல் குருவிற்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு நாடு முழுவதும் நடுநிலையாளர்கள் ,மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அஃப்சல் குருவிற்கு இன்னும் வாய்ப்பளித்திருக்க வேண்டும் .அவசர கோலத்தில் நிறைவேற்றப்பட்ட இத்தண்டனை தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:
Post a Comment