தமிழகத்தில் போலி மருத்துவர்களால் அதிக அளவில் உயிர் பலி ஏற்பட்டுள்ளது.இது குறித்து அகில இந்திய மருத்துவ சங்க தேசிய தலைவர் டாக்டர் விஜயகுமார் தெரிவிக்கையில் ,மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை காரணமாக, இறப்பு மற்றும் பிறப்பு சதவீதம் குறைந்து வருகிறது. டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களால், டெல்லி, சென்னை மற்றும் தென் தமிழக பகுதிகளில், அதிகளவில் பாதிப்பும், உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் உள்ளனர், இவர்களின் தவறான மருத்துவ சிகிச்சையால் உயிர் பலி, நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு, தமிழகத்தில் மட்டும், 2,000 போலி டாக்டர்களை, காவல்துறையினர் கைது செய்தனர்.
இவர்கள், நீதிமன்றத்தில், 500, 1,000 ரூபாய், அபராதம் கட்டி விட்டு, மீண்டும், மருத்துவ சிகிச்சை அளிக்கின்றனர். போலி வைத்தியர்களை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள், போலி மருத்துவர்கள் ஒழிப்பு சட்டத்தை கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

0 கருத்துரைகள்:
Post a Comment