
டெல்லி:பாகிஸ்தான் என்பது ஒரு நாடு அல்ல; அது பிரித்தாளும் கொள்கையை கொண்ட பிரிடிஷ்காரர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட போலியான நாடு என இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றம்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த சிந்து, பஞ்சாப் தான் பாகிஸ்தானாக உள்ளது. இரு நாடுகளுக்குமிடையே நடந்த போர் பற்றி பேசுவது தேச விரோதம் ஆகும். போர்களினால் நமது நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும். போருக்கு அதிக விலை கொடுக்க வேண்டும் என்பதையும் நமது நாடு ஏழை நாடு என்பதையும் அறியவேண்டும். இன்னும் 15-20 ஆண்டுகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றிணைந்து, வலுவான சக்திவாய்ந்த, மதச்சார்பற்ற மற்றும் நவீன அரசு அதிகாரத்திற்கு வரும் என்று தெரிவித்துள்ளார்

0 கருத்துரைகள்:
Post a Comment